உலகின் அனைத்து மக்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தியவர் எலிசபெத் மகாராணி - மஹிந்த

By T. Saranya

23 Sep, 2022 | 02:55 PM
image

(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)

பொறுமை, அர்ப்பணிப்புமிக்க வாழ்க்கையை கடைப்பிடித்த எலிசபெத் மகாராணி உலகின் அனைத்து மக்கள் தொடர்பில் கவனம் செலுத்தி  கரம்  கோர்த்து செயற்பட்டார் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைவியாக செயற்பட்டு  சிறந்த செயற்பாடுகளை முன்னெடுத்த அவர் எப்போதும் சம்பிரதாயங்களுக்கு முக்கியத்துவமளித்து வாழ்ந்தவர் என்றும்  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அமரத்துவமடைந்த எலிசபெத் மகாராணிக்கான அனுதாபப் பிரேரணையில் உரையாற்றும் போதே  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

உலகில் எத்தகைய சமூக அரசியல் மாற்றங்கள் ஏற்பட்ட போதும் தமது நாட்டின் சம்பிரதாயங்களை தொடர்ந்தும் சிறப்பாக கடைப்பிடித்தவர் எலிசபெத் மகாராணி.

தமது நாட்டை மட்டுமன்றி ஏனைய நாடுகளின் மக்களின் மீது கவனம் செலுத்தி வாழ்ந்ததுடன் இறுதி வரை உலகத்தவருடன் அவரது கரங்களை பிணைத்துக் கொண்டு பயணித்தவர் அவர்.

பொறுமை மற்றும்  அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அவர் நாட்டுக்காக தனிப்பட்ட ஆசாபாசங்களை கைவிட வேண்டும் என்பதற்கு முன்மாதிரியாக வாழ்ந்தவர்.

சம்பிரதாயங்களை பாதுகாப்பது அரச குலத்தின் சம்பிரதாயம். அதனை அவர் பாதுகாத்தார். அவரது அர்ப்பணிப்புமிக்க செயற்பாடுகள் எதிர்கால மன்னர்களுக்கும் சிறந்த முன்மாதிரியானவை. 

உலக மாற்றங்களுக்கு மத்தியிலும் தமது சம்பிரதாயங்களுக்கு மதிப்பளித்து செயற்பட்டவர். அதனால் பிரிட்டன் எப்போதும் தலைநிமிர்ந்து முன் செல்ல முடிந்தது. பிரித்தானிய அரசர்கள் தவறு செய்ய மாட்டார்கள் என்ற அடிப்படைக்கு அமைய தமது வாழ்க்கையை கடைப்பிடித்தார்.

பொதுநலவாய நாடுகளின் தலைவியாக அவர் மேற்கொண்ட பணிகள் அளப்பரியவை. இரண்டு தடவைகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். 

நாட்டின் பல முக்கியமான இடங்களுக்கு பயணம் செய்தார். அதன் போது அவரது செயற்பாடுகள் மிகவும் கௌரவமானதாக அமைந்தது. நாட்டைப் போன்று நாட்டில் வாழும் அனைத்து இன மக்களின் கௌரவத்தை பாதுகாக்க வேண்டும்  என்பதில் அவர் முன்மாதிரியாக செயற்பட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளூராட்சிமன்ற சபைகளை கலைக்கும் அதிகாரம் எமக்கு...

2023-02-01 18:47:56
news-image

13 ஐ அமுல்படுத்தினால் தமிழ் -...

2023-02-01 18:44:58
news-image

சிங்கள- தமிழ் இனக்கலவரம் மீண்டும் தோற்றம்...

2023-02-01 18:45:41
news-image

இலங்கை வழமைக்கு திரும்ப அமெரிக்கா தொடர்ந்தும்...

2023-02-01 18:43:08
news-image

மக்களை வஞ்சிக்காத சபையை நாம் அமைப்போம்...

2023-02-01 18:42:09
news-image

யானையின் வாலைப் பிடித்து சொர்க்கம் செல்ல...

2023-02-01 18:41:11
news-image

பயங்கரவாத தடைச்சட்டத்தை சீர்திருத்தும் நடவடிக்கைகளை தொடர்ந்து...

2023-02-01 17:33:03
news-image

இலங்கை ஜனநாயகம் நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்கான தருணம்...

2023-02-01 17:03:46
news-image

ஊடகவியலாளர் நிபோஜனின் உடலம் இறுதி அஞ்சலியுடன்...

2023-02-01 18:38:05
news-image

சமூக அமைதியின்மை நிலவிய காலங்களில் அரசாங்கம்...

2023-02-01 16:44:53
news-image

எல்பிட்டிய பிரதேச வீடு ஒன்றிலிருந்து இரு...

2023-02-01 16:39:04
news-image

வைத்தியசாலையில் சிகிச்சைபெறும் மனைவியை பார்க்க  தாயுடன்...

2023-02-01 16:14:37