மின் துண்டிப்பு காலத்தை நீடிக்க இடமளிக்கப்படமாட்டாது - அரசாங்கம்

By Vishnu

23 Sep, 2022 | 03:07 PM
image

(எம்.மனோசித்ரா)

நிலக்கரியை உரிய நேரத்தில் கிடைக்கப் பெறாமல் செய்து , மின்துண்டிப்பு நேரத்தை நீடிக்கச் செய்வதற்கான திட்டமிட்ட சதி இடம்பெறுகிறது.

இந்த சதித்திட்டத்தை முறியடிக்கும் வகையில் மக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் அவசர தேவையாக நிலக்கரியைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று (23) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இதன் போது மேற்கண்டவாறு தெரிவித்த அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில் ,

நிலக்கரி உரிய நேரத்தில் கிடைக்கப் பெறாதவாறு திட்டமிட்டு இறக்குமதியை இடை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மின் துண்டிப்பை நீடிப்பதே ஒரு சில தரப்பினரது எதிர்பார்ப்பாகும். தற்போது கிடைக்கப் பெற்றிருந்த நிலக்கரி இறக்குமதிக்கான விலைமனு , கடந்த ஆண்டை விட குறைந்த விலையாகவே காணப்படுகிறது.

ஏனைய பொருட்கள் அனைத்தினதும் விலைகள் அதிகரித்துள்ள நிலையில் , நிலக்கரியின் விலை மாத்திரம் குறைவாகக் காணப்பட்டது.

எனினும் சில தொழிநுட்ப காரணிகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் காரணமாக நிலக்கரியை இறக்குமதி செய்வதில் சில சிக்கல்கள் ஏற்பட்டன. இவ்வாறான நிலைமைகள் ஏற்படும் அவசர தேவை கருதி நடவடிக்கைகள் எடுப்பதற்கு அமைச்சரவை உப குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய அக்குழுவின் ஆலோசனைக்கமைய மக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் அவசர தேவையாக நிலக்கரியைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நிலக்கரி மூலமான மின் உற்பத்தியை நிறுத்தி மின் துண்டிப்பை 10 மணித்தியாலங்கள் வரை அதிகரிப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகளை முறியடிப்பதே எமது இலக்காகும். இதற்கு தேவையான எந்தவொரு நடவடிக்கையையும் முன்னெடுக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

வலு சக்தி அமைச்சர் மற்றும் இதனுடன் தொடர்புடைய அமைச்சரவை உப குழுக்களுக்கு இதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

எனவே மக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் அவசர தேசிய தேவையாகக் கருதி நிலக்கரி கொள்வனவு முன்னெடுக்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் மீண்டும் முதலீடு செய்வதில் சிங்கப்பூர்...

2022-09-27 10:44:40
news-image

பல மணிநேர மின்வெட்டை அமுல்படுத்தும் சாத்தியம்...

2022-09-27 10:02:47
news-image

பொருளாதார பிரச்சினைக்கு தீர்வுகாண புலம்பெயர் தொழிலாளர்களின்...

2022-09-27 10:34:18
news-image

இலங்கை இராணுவத்தின் 73 ஆவது ஆண்டு...

2022-09-27 10:26:41
news-image

இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு ஜப்பான் ஆதரவளிக்கும்...

2022-09-27 09:45:12
news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-09-27 09:29:04
news-image

யாழ். நெல்லியடியில் 60 லீற்றர் கசிப்புடன்...

2022-09-27 10:16:46
news-image

வங்கிக் கொள்ளை : பொதுஜன பெரமுனவின்...

2022-09-27 09:28:04
news-image

நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்

2022-09-27 08:59:44
news-image

சீன கம்யுனிஸ்ட் கட்சியின் மாநாட்டின் பின்னர்...

2022-09-27 08:41:02
news-image

வெளிநாட்டு வேலைவாய்ப்பு குறித்து அமைச்சர் மனுஷ...

2022-09-26 21:29:12
news-image

மஹிந்த தலைமையில் புதிய அரசியல் கூட்டணி...

2022-09-26 18:39:29