12 மணி நேர மின்வெட்டு ஏற்படும் - பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு எச்சரிக்கை

By Digital Desk 5

23 Sep, 2022 | 03:06 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

நாட்டின் மின்சார உற்பத்திக்கான நிலக்கரியை இறக்குமதி செய்யாவிட்டால்  10 அல்லது 12 மணி நேர மின்வெட்டு ஏற்படும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்தார்.

நாட்டில் தற்போது கையிருப்பில் உள்ள 250,000 மெட்றிக் டொன் நிலக்கரி ஒக்டோபர் 28ஆம் திகதி வரை மட்டுமே போதுமானதாக இருக்கும் என்பதுடன்,  நுரைச்சோலையில் உள்ள இரண்டு மின் உற்பத்தி  பிறப்பாக்கிகளை இயக்குவதற்கு நாளொன்றுக்கு 5000 மெட்றிக் ‍டொன் நிலக்கரி தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பொதுப்பயன்பாடு ஆணைக்குழுவில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பின்போது அவர்  மேலும் கூறுகையில்,

"நிலக்கரி இல்லாவிட்டால், நாட்டின் தேசிய மின் கட்டமைப்பிலிருந்து 900 மெகா வொட் மின்சாரத்தை இழக்க நேரிடும். நாட்டின் 35 சதவீத மின்சார உற்பத்தியானது நிலக்கரியிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது.

நிலக்கரிக்கான விலை மனுக்கோரலின்போது, மிகக் குறைந்த விலையை சமர்ப்பித்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட போதிலும், அதற்கெதிராக மற்றுமொரு நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளமையினால்,  விலை மனுக்கோரலின்போது அனுமதியைப் பெற்றுக்கொண்ட நிறுவனமானது நிலக்கரி வழங்க மறுத்துள்ளதன் காரணமாகவே இந்நிலைமை ஏற்பட்டுள்ளது " என்றார்.

இந்நிலையில் இருந்து விடுபட ஐந்து நாட்களுக்கு ஒருமுறை நிலக்கரி கப்பலை  இலங்கைக்கு கொண்டு வர 21 மில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாக ஜக்க ரத்நாயக்க மேலும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு

2022-10-07 10:52:21
news-image

நாவலப்பிட்டியில் துப்பாக்கி, வெற்றுத்தோட்டாக்களுடன் ஒருவர் கைது

2022-10-07 10:49:00
news-image

மினுவாங்கொடை முக்கொலை ; இதுவரை 6...

2022-10-07 10:12:27
news-image

தேசிய சபையின் கூட்டத்தில் இரண்டு உப...

2022-10-07 10:45:59
news-image

13 வயது சிறுமியை வன்புணர்ந்து கர்ப்பமாக்கிய...

2022-10-07 10:44:53
news-image

உருவானது அம்மான் படையணி ! 

2022-10-07 10:27:46
news-image

நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய...

2022-10-07 09:41:14
news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-10-07 08:38:12
news-image

உலக நாடுகள் பொறுப்புக்கூறல் நடவடிக்கைகள்; சர்வதேச...

2022-10-07 08:10:22
news-image

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தாவிடின் நாடு பாரிய நெருக்கடிக்குள்...

2022-10-06 18:47:07
news-image

ஊழல் அரசியல்வாதிகளை விரட்டியடிக்க நாட்டு மக்கள்...

2022-10-06 18:37:34
news-image

ஜனாதிபதி ரணிலை பணயக்கைதியாக வைத்திருக்கவில்லை -...

2022-10-06 22:00:05