சுதந்திரமான ஜனநாயக நாடான இந்தியாவிலேயே இறக்க விரும்புகிறேன்: தலாய் லாமா

By Rajeeban

23 Sep, 2022 | 01:03 PM
image

சுதந்திரமான ஜனநாயக நாடான இந்தியாவிலேயே இறக்க விரும்புவதாகவும், சீனாவில் இறக்க விரும்பவில்லை என்றும் தலாய் லாமா தெரிவித்துள்ளார்.

திபெத்தின் புத்தமத தலைவரான தலாய் லாமா, சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் இருந்து கடந்த 1959-ம் ஆண்டு தப்பி இந்தியாவில் தஞ்சமடைந்தார். அவரோடு, அவரது சீடர்களும், அரசு அதிகாரிகளும் இந்தியாவில் தஞ்சமடைந்தனர். அவர்கள், ஹிமாச்சலப் பிரதேசத்தின் தரம்சாலாவில் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில், தலாய் லாமாவை அமெரிக்காவின் இளம் தலைவர்கள் சந்தித்து உரையாடினர். அப்போது பேசிய தலாய் லாமா, தனது மரணம் தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கூறியதை நினைவுகூர்ந்து விவரித்தார்.

"அடுத்த 15 - 20 ஆண்டுகள் நான் உயிரோடு இருப்பேன். அதில் கேள்விக்கு இடமில்லை. இறக்கும் நேரம் வரும்போது, நான் இந்தியாவையே தேர்ந்தெடுப்பேன். ஏனெனில், இந்தியர்கள் அன்பு மிக்கவர்கள். அவர்களிடம் செயற்கைத்தனம் ஏதும் இல்லை. எனவே, அவர்கள் மத்தியிலேயே இறக்க விரும்புகிறேன். மாறாக, செயற்கைத்தனம் நிறைந்த சீன அதிகாரிகள் மத்தியில் இறக்க விரும்பவில்லை. சுதந்திரமான ஜனநாயக நாடான இந்தியாவில் மரணம் அடைய வேண்டும் என்பதே எனது விருப்பம்" இவ்வாறு மன்மோகன் சிங்கிடம் கூறினேன் என தலாய் லாமா தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஃபேஸ்புக்கில் தலாய் லாமா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உண்மையாகவே வருந்தக்கூடிய நம்பிக்கையான நண்பர்கள் மத்தியில்தான் ஒருவர் உயிரிழக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொவிட் குறித்து வதந்திகளை பரப்பியமைக்காக சீனாவில்...

2022-09-25 12:05:01
news-image

தாய்வான் தொடர்பான அவுஸ்திரேலியாவின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை...

2022-09-25 11:39:18
news-image

எந்த ஒரு பயங்கரவாத செயலையும் நியாயப்படுத்த...

2022-09-25 11:13:42
news-image

என்ஐஏ சோதனையைத் தொடர்ந்து பாஜகவினர் வீடுகளில்...

2022-09-25 11:07:45
news-image

சீனா ஜனாதிபதி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளாரா? -...

2022-09-25 10:23:23
news-image

இந்திய தளவாடக் கொள்கை நாட்டின் வளர்ச்சியை...

2022-09-24 11:04:44
news-image

சிரிய கடற்பரப்பில் படகு கவிழ்ந்ததில் 77...

2022-09-24 12:29:55
news-image

ஹிஜாப் அணிய மறுத்த பெண் செய்தியாளர்...

2022-09-23 20:39:13
news-image

சீனாவின் பூஜ்ஜிய கொவிட் கொள்கை-திபெத் மக்களிற்கு...

2022-09-23 15:37:57
news-image

ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் ;...

2022-09-24 07:36:08
news-image

பரப்பன அக்கரகார சிறையில் சட்ட விரோதமாக...

2022-09-23 15:06:00
news-image

சுதந்திரமான ஜனநாயக நாடான இந்தியாவிலேயே இறக்க...

2022-09-23 13:03:27