குருந்தூர்மலை விவகாரம் : தொல்லியல் திணைக்கள பணிப்பாளரை முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவு!

Published By: Vishnu

23 Sep, 2022 | 02:41 PM
image

கே .குமணன் 

குருந்தூர்மலை பௌத்த விகாரை அமைக்கப்பட்டுவரும் விவகாரம் தொடர்பில் ஏற்கனவே அதாவது (19.07.2022) அன்று முல்லைத்தீவு நீதிமன்றம் ஆக்கிய கட்டளையான ஜூன் மாதம் 12 ஆம் திகதி 2022 க்கு முன்னர் எந்த நிலையில் குருந்தூர் மலையில் கட்டுமான நடவடிக்கைகள் காணப்பட்டதோ அதே நிலையை   தொடர்ந்தும் பேணுமாறும் புதிதாக எந்தவிதமான கட்டுமானகளையும் செய்யமுடியாது எனவும் அத்தோடு தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தை எதிர்வரும் 13.10 .2022 அன்று முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலையாகுமாறும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் கட்டளையை பிறப்பித்துள்ளது.

முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை பகுதியில் நீதிமன்ற உத்தரவுக்கு பின்னரும் தொடர்சியாக பௌத்த கட்டுமான பணிகள் இடம்பெற்று வருகின்றமை தொடர்பில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டுவரப்படுள்ளது. 

சிரேஸ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தை சேர்ந்த சட்டதரணிகள் அனைவரும் இணைந்து  ஏற்கனவே நீதிமன்றம் கட்டளையிட்ட AR 673 / 2018 வழக்கிலே  நகர்தல் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்து நீதிமன்ற கட்டளைக்கு புறம்பாக கட்டுமானம் இடம்பெற்றுவருவதை மன்றில் சுட்டிக்காட்டினர். இதே வேளை பொலிஸார் இந்த விடயம் தொடர்பில் மன்றுக்கு அறிக்கையை வழங்க கால அவகாசம் தேவைப்படுவதாக மன்றுக்கு தெரிவித்தனர். 

இந்த நிலையில் இந்த வழக்கில் வருகின்ற தவணையான 13/10/2022 வரை ஏற்கனவே நீதிமன்றம் விதித்த கட்டளையை பேணுவதாக கூறினார்கள். அத்துடன் அடுத்த தவணைக்கு தொல்லியல் திணைக்கள பணிப்பாளரையும் பொலிஸாரையும்  மன்றிலே ஆஜராகுமாறு மன்று கட்டளையிட்டது .

இதேவேளை 21 ஆம் திகதி புதன்கிழமை குருந்தூர் மலையில் போராட்டம் இடம்பெற்ற வேளையில்  கூட இராணுவத்தினர் மற்றும் தொல்லியல் திணைக்களத்தினர் இணைந்து கட்டுமானப்பணிகளை முன்னெடுத்திருந்ததோடு புராதன கல்லை ஒத்த புதிய கற்களை புதிதாக வடிவமைத்து சீமெந்து கலவைகளை கொண்டு கட்டுமான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததையும் அவதானிக்க முடிந்தது .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58