வெளிநாட்டு பயணிகளுக்கு விதிக்கப்பட்ட பயணக்கட்டுப்பாடுகளை நீக்குகிறது ஜப்பான்

Published By: Digital Desk 3

23 Sep, 2022 | 03:04 PM
image

கொவிட் -19 தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த எல்லைகளை வெளிநாட்டு பயணிகளுக்கு ஜப்பான் திறக்கவுள்ளது.

அதற்கமைய, சுற்றுலாப் பயணிகள் விசா இல்லாமல் நாட்டிற்குச் செல்ல முடியும். மேலும் அக்டோபர் 11 முதல் பயண நிறுவனம் மூலம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. நாளாந்த வருகைக்கான கட்டுப்பாடு நீக்கப்படும்.

நாட்டிற்கு வருபவர்கள் மூன்று முறை கொவிட் தடுப்பூசியை போட்டிருக்க வேண்டும், கொவிட்-19 பரிசோதணை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவிற்கு இணையாக இருக்கும் வகையில் எல்லைக் கட்டுப்பாட்டுகளை ஜப்பான் தளர்த்தும் என பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்தார்.

ஜப்பான்  ஜூன் முதல் பார்வையாளர்களுக்கு அனுமதித்தது. ஆனால் அவர்கள் சுற்றுப்பயணங்களின் ஒரு பகுதியாக இருக்க வேண்டியிருந்தது.

பயணங்கள், தீம் பார்க், விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் கச்சேரிகள் ஆகியவற்றிற்கு விசேட சலுகை வழங்கும். ஜப்பானிய குடியிருப்பாளர்கள் மற்றும் குடிமக்கள் 11,000 யென் (£69; $77) மானியத்திற்கு தகுதியுடையவர்கள் ஆகிய உள்நாட்டு பயண ஊக்குவிப்புத் திட்டத்தையும் கிஷிடா அறிவித்தார். 

உலகின் பணக்கார நாடுகளில் ஜபானில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளதோடு, தடுப்பூ போட்டு கொண்டவர்களின் விகிதம் மிக அதிகமாக உள்ளது.

கொவிட் தொற்று பரவல் ஏற்படுவதங்கு முன்பு 2019 ஆம் ஆண்டில் ஜப்பான் கிட்டத்தட்ட 32 மில்லியன் வெளிநாட்டினர் ஜப்பானுக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கத்தோலிக்க திருச்சபையை சீர்திருத்தும் மூன்று வருட...

2025-03-17 15:27:25
news-image

ஹமாஸிற்கு ஆதரவளித்ததால் விசா ரத்து: அமெரிக்காவில்...

2025-03-17 13:09:43
news-image

வொய்ஸ் ஒவ் அமெரிக்காவை மூடுவதற்கு டிரம்ப்...

2025-03-17 11:06:21
news-image

மத்திய பிரதேச மருத்துவமனையில் தீவிபத்து: 190...

2025-03-17 10:27:51
news-image

வடக்கு மசெடோனியாவில் இரவு விடுதியில் தீ...

2025-03-16 14:34:32
news-image

பலநாடுகளிற்கு எதிராக போக்குவரத்து தடை -...

2025-03-16 12:43:01
news-image

“உங்கள் இந்தி மொழியை எங்கள் மீது...

2025-03-16 11:53:38
news-image

பத்திரிகையாளர்கள் நிவாரண பணியாளர்கள் மீது இஸ்ரேல்...

2025-03-16 10:47:17
news-image

ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் நிலைகள் மீது அமெரிக்கா...

2025-03-16 07:38:57
news-image

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னிலையில் வீடியோ...

2025-03-15 12:07:55
news-image

பங்களாதேஷில் 8 வயது சிறுமி பாலியல்...

2025-03-14 15:44:10
news-image

பனாமா கால்வாயை முழுமையான கட்டுப்பாட்டின் கீழ்...

2025-03-14 14:33:13