முருங்கைக் கீரை சூப்

By Sindu

23 Sep, 2022 | 02:42 PM
image

தேவையான பொருட்கள்

முருங்கைக் கீரை - 1 கப்

பாசிப்பருப்பு - 5 டீஸ்பூன்

சீரகம் - 1/2 டீஸ்பூன்

நெய், மிளகுத்தூள் - தலா 1 டீஸ்பூன்

வெங்காயம் -1

வெ.பூண்டு பல் - 4

தோல் சீவிய இஞ்சி - சிறிதளவு

பச்சை மிளகாய் - 2

உப்பு - தேவைக்கு

செய்முறை

வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, வெ.பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும். 

முருங்கைக் கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும். 

குக்கரில் பாசிப்பருப்பு, கீரை, சீரகம், வெங்காயம், வெ.பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், இரண்டு கப் தண்ணீர் ஊற்றி மூடி 4 விசில் விட்டு இறக்கவும். 

விசில் போனவுடன் குக்கரை திறந்து பருப்பு கலவையை நன்கு மசிக்கவும். 

வாணலியில் நெய் விட்டு உருகியதும் பருப்பு, முருங்கைக்கீரை சாற்றை ஊற்றவும். இதனுடன் ஒரு கப் தண்ணீர், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கி பருகலாம். 

சத்தான முருங்கைக் கீரை சூப் ரெடி.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right