கபாலபதி பிராணாயாமம்

Published By: Sindu

23 Sep, 2022 | 11:15 AM
image

வேகமான மூச்சுப் பயிற்சி முறையான கபாலபதி பிராணாயாமம் உடலின் நச்சுக் கழிவுகளை வெளியேற்றுகிறது. 

செய்முறை 

வஜ்ஜிராசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும். முதுகை நேராக வைக்கவும். உள்ளங்கைகளை வயிற்றில் தொப்புளின் இருபுறத்தில் வைக்கவும். சாதாரண முறையில் மூச்சை உள்ளிழுக்கவும். மூச்சை வெளியேற்றும்போது, வயிற்றை நன்றாக உள்ளிழுத்து வேகமாக மூச்சை வெளியேற்றவும். 

பின் மீண்டும் சாதாரணமாக மூச்சை உள்ளிழுத்து, வயிற்றை உள்ளிழுத்து வேகமாக மூச்சை வெளியேற்றவும். இவ்வாறு பத்து முறை தொடர்ந்து செய்யவும். பின் சிறிது நேரம் சீரான மூச்சில் இருந்து விட்டு மீண்டும் இரண்டு அல்லது மூன்று முறை செய்யவும். 

பலன்கள் 

சுவாச மண்டலத்தைப் பலப்படுத்துகிறது. உடலில் பிராணவாயு ஓட்டம் சீராகிறது. உடலில் உள்ள நச்சுக் கழிவுகளை வெளியேற்றுகிறது. அதிகக் கொழுப்பைக் கரைக்கிறது. நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்துகிறது. வயிற்று உள்ளுறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. மனதை அமைதிப்படுத்துகிறது. 

குறிப்பு 

இருதயம், வயிறு மற்றும் முதுகுத்தண்டு சார்ந்த கோளாறு உள்ளவர்கள் கபாலபதி பிராணாயாமம் பயிலக் கூடாது. பெண்கள் மாதவிடாயின்போதும் கர்ப்பம் தரித்திருக்கும்போதும் கபாலபதி பிராணாயாமத்தைத் தவிர்க்க வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right