யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அண்ணியுடன், போதை தலைக்கேறிய நிலையில் தகாத முறையில் நடந்து கொள்ள முற்பட்ட இளைஞனை பொலிஸார் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த பகுதியில் வசிக்கும் இளைஞன் ஒருவர் போதைக்கு அடிமையான நிலையில் அப்பகுதியில் வசிக்கும் பெண்களுடன் தகாத முறையில் நடக்க முயற்சித்து வந்ததுடன், பெண்களை தகாத வார்த்தை பிரயோகங்களால் பேசியும் வந்துள்ளார்.
குறித்த இளைஞனின் போதை அட்டகாசங்கள் அதிகரித்து வந்த நிலையில் , தனது அண்ணனின் வீட்டுக்கு சென்று அண்ணன் இல்லாத நிலையில் அண்ணியுடன் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்துள்ளார்.
இளைஞனிடம் இருந்து சாதுரியமாக தப்பித்த அண்ணி அது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் தற்போது இளைஞன் தலைமறைவாகியுள்ளார். அவரை கைது செய்வதற்கு பொலிஸார் தீவிர நடவடிக்கைளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM