கேள்வி
எனக்கு வயது 22. கல்யாணம் ஆகி 11 மாதங்கள் ஆகின்றன. திருமணமான 2 மாதங்களில் கணவர் வேலைக்காக வெளிநாடு சென்றுவிட்டு, ஏழு மாதங்கள் கழித்து வந்திருக்கிறார்.
இன்னும் சில நாட்களில் மீண்டும் வெளிநாடு செல்லவிருக்கிறார். பிரச்சினை என்னவென்றால் எமக்கு இன்னும் குழந்தை பிறப்பதற்கான அறிகுறிகள் இல்லை.
தைரொய்ட் காரணமாக மாதவிடாய் சீராக இல்லை என்று மருந்து எடுக்கிறேன். பருவமடைந்த இரண்டு வருடங்களின் பின் திடீரென தொடையும் வயிறும் பெருத்துக் காணப்படுகின்றன.
இதனால் கணவனுக்கும் என்னைப் பெரிதும் பிடிக்கவில்லை. உறவின்போதும் மனம் நோகும்படி பேசுகிறார். கை கால்களில் உரோமங்களும் காணப்படுகின்றன. இதனால், எனக்கு வேறேதும் நோய்கள் இருக்குமோ என்று பயமாக இருக்கிறது. எனது பிரச்சினைகள் தீர தயவுசெய்து வழி சொல்லுங்கள்.
பதில்
பயப்படாதீர்கள். தைரியமாக இருங்கள். திருமணமாகி ஒரு வருடம் பூர்த்தியாகவே இல்லை. அதிலும் கணவர் வெளிநாடு சென்றிருக்கிறார். உங்களுக்கும் மாதவிடாய் சீராக இல்லை. இதோ... கணவர் திரும்பவும் வெளிநாடு செல்லப்போகிறார். அவர் அடுத்த முறை திரும்பி வரும்வரை, உங்களது பிரச்சினைகள் ஒவ்வொன்றாகக் களைவதற்கு போதிய கால அவகாசம் இருக்கிறது.
முதலில் உடற்பருமன். நீங்கள் குறிப்பிட்ட தொடை மற்றும் வயிற்றுப் பகுதிகளைக் குறைப்பதற்கென்று பிரத்தியேக உடற்பயிற்சிகள் இருக்கின்றன.
கடுமையான உடற்பயிற்சிகள் கர்ப்பத்திற்குத் தடையாக இருக்கும் என்றாலும், உங்களுக்கு வயதும், காலமும் இருப்பதால், முதலில் இவ்விறு உறுப்புகளும் இயல்பு நிலைக்கும் வரும்வரை தகுந்த உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
அடுத்து, மாதவிடாய்ப் பிரச்சினை. அதற்காக மருந்து எடுத்துக்கொள்கிறீர்கள். எனவே, அதுவும் காலப்போக்கில் சீராக வாய்ப்புகள் உள்ளன. இதேவேளை, தைரொய்டுக்கும் மருந்து எடுத்துக்கொள்கிறீர்கள். விடாமல் தொடர்ச்சியாக தைரொய்டுக்கான மாத்திரைகளை எடுத்துக்கொண்டால் நிச்சயமாகச் சில மாதங்களுக்குள் அந்தப் பிரச்சினையும் கட்டுக்குள் வந்துவிடும்.
உரோமப் பிரச்சினைக்கு, தகுதிவாய்ந்த சருமவியல் வைத்தியர் ஒருவரிடம் ஆலோசனை பெறுங்கள். ஒருவேளை, மேலே நீங்கள் குறிப்பிட்ட பிரச்சினைகளாலும் உரோமப் பிரச்சினை உண்டாகலாம். ஒருவேளை, இயற்கையாகவே உங்கள் உடலில் உரோமம் அதிகமாக இருக்கும் என்றால், ‘ஷேவிங்’ மற்றும் ‘வெக்ஸிங்’ மூலம் உரோமப் பிரச்சினைக்கு அவ்வப்போது தீர்வு காணலாம்.
இந்தப் பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டுவர ஒரு குறிப்பிட்ட காலத்தை இலக்காகக் கொண்டு செயற்படுங்கள். அடுத்த முறை உங்கள் கணவர் நாடு திரும்பும்போது, உங்களைப் பார்த்து ஆச்சரியப்படும் அளவுக்கு உங்கள் தோற்றத்தை மாற்றிக்கொள்ளுங்கள். கூடவே, உங்கள் மனதிலும் மகிழ்ச்சியை நிறைத்துக்கொள்ளுங்கள்.
ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். உங்களுக்கு வயது இருக்கிறது. மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்ளப் போதிய கால அவகாசமும் இருக்கிறது. எனவே, தயக்கம் வேண்டாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM