பூஜையுடன் தொடங்கிய தனுஷின் 'கேப்டன் மில்லர்'

Published By: Digital Desk 5

23 Sep, 2022 | 11:21 AM
image

தனுஷ் நடிப்பில் தயாராகும் புதிய படமான 'கேப்டன் மில்லர்' எனும் திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

'ராக்கி', 'சாணி காயிதம்' ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'கேப்டன் மில்லர்'. இதில் தனுஷ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். 

இவர்களுடன் சந்திப் கிஷன், நிவேதா சதீஷ், டேனியல் பாலாஜி, ஜான் கொக்கன், நாசர், விஜி சந்திரசேகர், குமரவேல், ஸ்யாம்சித்தா தாஸ், பிந்து, அருணோதயன், ஆண்டனி, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 

மதன் கார்க்கி வசனம் எழுதும் இந்த திரைப்படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, 'இசை அசுரன்' ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.‌ பீரியட் எக்சன் என்டர்டெய்னர் ஜேனரில் தயாராகும் இந்த திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் என்னும் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் டி ஜி தியாகராஜன் தயாரிக்கிறார்.‌

1930 மற்றும் 40 ஆகிய காலகட்டத்தை கதைக்கள பின்னணியாகக் கொண்ட ஒரு வரலாற்று திரைப்படமாக 'கேப்டன் மில்லர்' தயாராகிறது. தனுசுக்கு தமிழ் திரையுலகை கடந்து இந்திய திரை உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு இருப்பதால், 'கேப்டன் மில்லர்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் தயாராகி, வெளியாகவிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சந்தோஷ் நாராயணன் இசையில் “ஜிகர்தாண்டா double...

2023-09-28 15:07:09
news-image

சித்தா - விமர்சனம்

2023-09-28 15:02:48
news-image

நடிகர் மதுர் மிட்டல் நடிக்கும் '800'...

2023-09-28 14:30:39
news-image

தளபதி விஜயின் 'லியோ' படத்திலிருந்து அடுத்த...

2023-09-28 12:33:16
news-image

நடிகர் ஆதி நடிக்கும் 'சப்தம்' படத்தின்...

2023-09-27 14:40:50
news-image

தன் பாலின சேர்க்கையாளர்களின் காதலை உரக்கப்...

2023-09-27 14:41:11
news-image

தளபதி விஜயின் 'லியோ' பட இசை...

2023-09-27 14:43:36
news-image

சிறிய முதலீட்டில் தயாராகி இருக்கும் 'எனக்கு...

2023-09-26 17:25:37
news-image

மணிரத்னம், கமல்ஹாசன் பாராட்டிய சித்தார்த்தின் 'சித்தா'

2023-09-26 15:57:08
news-image

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும்...

2023-09-26 17:23:44
news-image

இரட்டைச் சாதனை படைத்திருக்கும் ஒரே இந்திய...

2023-09-26 14:51:25
news-image

வித்தியாசமாக உருவாகி இருக்கும் 'இறைவன்'

2023-09-25 13:12:03