மீண்டும் இணையும் விஜய் - அட்லி

Published By: Robert

18 Nov, 2016 | 03:31 PM
image

விஜய்யும், அட்லியும் மீண்டும் இணையப்போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.

‘தெறி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய்யும் அட்லியும் மீண்டும் இணையப்போவதாக சமீபத்தில் செய்திகள் வெளிவந்தன. இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டு இருந்தன. ஆனால், இதுவரை தயாரிப்பாளர் தரப்பிலோ, இயக்குனர் தரப்பிலோ இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

இந்நிலையில், விஜய் தற்போது நடித்துவரும் ‘பைரவா’ படத்தை தொடர்ந்த அட்லி இயக்கும் படத்தில் நடிக்கப்போவதாகவும், அந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் படம் குறித்த வேறு எந்த தகவலும் இடம்பெறவில்லை.

இப்படத்திற்கு ‘பாகுபலி’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களுக்கு கதை ஆசிரியராக பணியாற்றிய விஜயேந்திர பிரசாத் திரைக்கதையாசிரியராக பணியாற்றுகிறார் என்று கூறப்படுகிறது. அதேபோல், இந்த படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கப் போவதாகவும் சொல்லப்படுகிறது. விரைவில் அதுகுறித்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடுவார்கள் என தெரிகிறது.

விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பைரவா’ படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது. அதனையடுத்து, இப்படத்தின் பணிகளை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பூஜையுடன் தொடங்கிய பிரபு தேவாவின் 'பேட்ட...

2023-06-02 10:57:34
news-image

சமுத்திரகனி நடிக்கும் 'விமானம்' பட முன்னோட்டம்...

2023-06-02 10:43:53
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' படப்பிடிப்பு...

2023-06-02 10:44:21
news-image

உதயநிதி ஸ்டாலினின் 'மாமன்னன்' ஒடியோ வெளியீடு

2023-06-02 10:43:16
news-image

எஸ்.ஜே. சூர்யாவின் 'பொம்மை' திரைப்படத்தின் வெளியீட்டு...

2023-06-02 10:46:49
news-image

ரேகா நடிக்கும் 'மிரியம்மா' பட தொடக்க...

2023-06-02 09:55:25
news-image

'எறும்பு' திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியீடு

2023-06-01 17:02:25
news-image

'டக்கர்' அதிவேகமான திரைக்கதை - நடிகர்...

2023-06-01 14:05:31
news-image

இளைய தலைமுறையினரைக் கவருமா சித்தார்த்தின் ‘டக்கர்’..?

2023-06-01 12:03:24
news-image

சுனைனா நடிக்கும் 'ரெஜினா' பட டீசர்...

2023-06-01 11:31:49
news-image

ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட ‘போர் தொழில்’படத்தின் முன்னோட்டம்

2023-05-31 14:32:35
news-image

நடிகர் குரு சோமசுந்தரம் நடிக்கும் 'பெல்'

2023-05-31 10:47:00