ஆயிரம் ஆண்டு பாரம்பரியமிக்க பெர்சிய எம்பிராய்டரி கைவினைக் கலை

By Digital Desk 5

23 Sep, 2022 | 10:56 AM
image

இன்றைய சூழலில் பாடசாலை மற்றும் கல்லூரியில் உயர் கல்வி கற்கும் மாணவிகள் முதல் பணிக்குச் செல்லும் இல்லத்தரசிகள் வரை திருமணம், பிறந்த நாள், விருந்து மற்றும் சுப வைபவங்களின் போது பிரத்யேகமாக அணியும் ஆடைகளில் எம்பிராய்டரி எனப்படும் கூடுதலான அலங்கார பணிகளைச் செய்து, பார்ப்பதற்கு பொலிவாகத் தோன்றும் வகையில் அணிவது பிரசித்தம். 

அதாவது தற்போதைய இளம் பெண்கள் அணியும் உடையில் பிரபலமாக இருக்கும் ஆரி வொர்க்கில் சில்க் த்ரெட், ஜிமிக்கி, ஸ்டோன்ஸ், ஜர்தௌஸி என பல டிசைன்களில் எம்பிராய்டரி செய்து அணிகிறார்கள்.

இத்தகைய ஆரி வொர்க்கின் அழகை விட பாரம்பரியமிக்க பெர்சிய எம்பிராய்டரி செய்யப்பட்ட ஆடையை அணிந்து வந்த பெண்மணியினைப் பார்த்ததும் கூட்டத்தினர் வியப்படைவர்.

உடனே எம்மில் பலரும் பெர்சிய எம்பிராய்டரியா..! என விழிகளின் மேலுள்ள புருவத்தை உயர்த்தி, ஆச்சரியத்தை வெளிப்படுத்துவர். அதைப் பற்றி அறிந்துகொள்ளவும் ஆர்வம் காட்டுவர். 

பெர்சிய நாட்டின் பாரம்பரியமிக்க கைவினை கலை இது. அதனை பார்சி எம்பிராய்டரி என்றும், ஜோராஷ்ட்ரியன் எம்பிராய்டரி என்றும் குறிப்பிடுவார்கள். இந்த பார்சி எம்பிராய்டரி அழிவின் விளம்பில் இருக்கும் கைவினை நுண்கலையாகும். இந்த வகை கலை, நேர்த்தியுடனும், நுட்பத்துடனும் இருக்கும். குறிப்பாக கடந்த 150 ஆண்டுகளுக்கு முன் வடஇந்தியாவிலுள்ள குஜராத்திய உயர் அந்தஸ்துள்ள குடும்ப பெண்மணிகள் இத்தகைய பெர்சிய எம்பிராய்டரியுடனான கூடிய ஆடையை அணிந்தனர். 

அதனை காரா புடவைகள் என்றும் குறிப்பிடுகிறார்கள். ஈரானிய நாட்டின் பாரம்பரிய கலையான இந்த பெர்சிய எம்பிராய்டரி கலையை, சீன வணிகர்கள் மூலமாக பாரசீக, இந்திய மற்றும் ஐரோப்பிய பெண்மணிகளிடம் அறிமுகமானது. அதன் பிறகு இந்திய ஜவுனி பாரம்பரியத்துடன் இந்த பெர்சிய எம்பிராய்டரி கலை பின்னி பிணைந்து வளரத் தொடங்கியது. 

பெர்சிய பெண்மணிகள் இந்த கலையைக் கற்றுக்கொண்டு, தங்களின் கைவண்ணமான சர்தௌசி கலையுடன் இணைந்து புதிய பாணியிலான எம்பிராய்டரியை உருவாக்கி, அதனை பார்சி எம்பிராய்டரி என பெயரிட்டனர். இந்த எம்பிராய்டரி இயற்கையான வடிவத்தைக் கொண்டிருக்கிறது. 

பியோனிகள், தாமரை, அல்லி, செர்ரி போன்ற மலர்கள், மரங்கள், பூக்கள், பறவைகள், குடிசைகள், மனித உருவங்கள் என பலவும் இந்த பாணியிலான எம்பிராய்டரியில் இடம்பெற்றிருக்கும். ஒவ்வொரு எம்பிராய்டரியிலும் ஒரு மையக்கருத்தும் இடம்பெற்றிருக்கும். மகிழ்ச்சியின் அடையாளமாகவும் இது இருக்கிறது. 

பிரகாசமான வெளிர் வண்ணங்களும் இடம்பெற்றிருக்கும். சிலவற்றில் சீன நாட்டின் பாரம்பரிய சின்னங்களும் இடம்பெற்றிருக்கும். மேலும் சக்லா சக்லி, சைப்ரஸ் மரம், பாரசீன சின்னங்கள், இந்திய தாமரை, மயில் மற்றும் பல்வேறு கலாச்சார வடிவங்களும் அதில் இடம்பெற்றிருக்கும். 

பாரம்பரியமிக்க பார்சி எம்பிராய்டரியுடன் கூடிய ஒரு காரா சேலையை உருவாக்க, இத்தகைய கலைஞர்களுக்கு ஒன்பது மாத கால அவகாசம் தேவைப்படுகிறது. இத்தகைய காரா புடவைகள், பெர்சிய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் குறியீடாக மாற்றம் பெற்றது. 

தற்போது இந்த வகையினதான தையல், கைகளால் மேற்கொள்ளப்படவில்லை. இயந்திரத்தின் உதவியால் மேற்கொள்ளப்படுகிறது. இருப்பினும் கைவினை கலையாக தயாரிக்கப்பட்ட காரா புடவைகளில் தங்க நூல்கள், வெள்ளி நூல்கள் போன்றவையும் நேர்த்தியான நுட்பத்துடன் இணைக்கப்பட்டு இன்றும் பெரும் வரவேற்புடன் உள்ளன. தற்போது செயற்கை இழைகளாலும் காரா புடவைகளில் பார்சி எம்பிராய்டரி மேற்கொள்ளப்படுகிறது. 

தேவையின் அதிகரிப்பு, பார்சி எம்பிராய்டரியை பாரம்பரியமான கலையாக வளர்த்தெடுக்கும் பெண் கலைஞர்களின் பற்றாக்குறை... ஆகியவற்றின் காரணமாகவும், இத்தகைய பார்சி எம்பிராய்டரி, செயற்கையான முறையில் உருவாக்கப்படுகிறது. 

மேலும் பார்சி சமூக மக்களின் விருப்பத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாகவும் இதன் மீதான மோகம் குறைந்தது. இருப்பினும், தற்போதைய இணையத்தலைமுறையினர் பாரம்பரிய கலைகளை, அதற்கேயுரிய நேர்த்தியுடன் மீட்டெடுக்க விருப்பம் கொண்டிருக்கிறார்கள். இதனால் இந்த கலையை மீண்டும் புத்துயிர் அளித்து, இதனை வளர்த்தெடுத்து வருகிறார்கள். 

தற்போதைய சூழலில் உள்ளவர்களும் பயன்படுத்தும் வகையில் பார்சி எம்பிராய்டரி வகைகளுடன் கூடிய ஆடைகள், மணிபர்ஸ்கள், ஸ்கார்வ், ஷால், குர்தா, போன்றவைகளில் இதனை பயன்படுத்தி சந்தைகளில் அறிமுகப்படுத்துகின்றனர். இதற்கு இளைய தலைமுறையிடத்தில் வரவேற்பு கிடைத்து வருகிறது. அதற்கேற்ற வகையில் ஆடை வடிவமைப்பாளர்களும் தங்களின் நவீன உடை வடிவமைப்பில் பார்சி எம்பிராய்டரியை இணைத்து அறிமுகப்படுத்துகின்றனர். 

மேலும் இதனை பிரபலப்படுத்த பாரம்பரிய காரா புடவைகளைத் தவிர்த்து, பைகள், தாவணிகள், குஷன் கவர்கள், துப்பட்டாக்கள், ஆடைப் பொருட்கள் போன்ற புதிய தயாரிப்புகள் மூலம் பார்சி எம்பிராய்டரியைப் பிரபலப்படுத்துகிறார்கள். அண்மையில் கூட பாரீஸ் பெஷன் ஷோக்களில் இத்தகைய பார்சி எம்பிராய்டரி அறிமுகமாகியிருக்கிறது

மேலும் பாரம்பரியமிக்க காரா புடவைகளை பேணி பராமரிக்காவிடில், அவற்றுடன் அதில் இருக்கும் பட்டும் கிழிந்து, சேதமடைந்துவிடும். பாரம்பரிய மிக்க பார்சி எம்பிராய்டரியுடன் கூடிய காரா புடவைகளை பராமரிப்பது சவாலானதாக இருந்தது. தற்போது அவை எளிமைப்படுத்தப்பட்டிருக்கிறது

இந்த பார்சி எம்பிராய்டரியுடனான காரா புடவைகள் இந்திய மதிப்பில் தற்போது 20,000 முதல் 80,000 ரூபாய் வரை விற்பனையாகிறது. பார்சி எம்பிராய்டரி செய்யும் சேலைகள் பட்டால் தயாராகியிருக்கும் என்பதும், அவை மென்மையானதாகயிருக்கும் என்பதும், கடந்த ஐந்து தசாப்தங்களுக்கு முன் பார்சி இன பெண்களிடத்தில் பார்சி எம்பிராய்டரியுடன் கூடிய காரா புடவைகள் இருந்தால், அது பிறந்த வீட்டு சீதனமாகவும், பெண்ணிற்குரிய பிரத்யேக சொத்தாகவும் கருதப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாரம்பரியமிக்க கலையாகக் கருதப்படும் பார்சி எம்பிராய்டரி கலையை, அதன் நவீன வடிவத்தை ஆதரித்து, அந்த கலையை நாமும் வளர்த்தெடுப்போம். அடுத்த தலைமுறையினருக்கும் எடுத்துரைப்போம். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'அழுவதற்கு நேரமில்லை' - நூல் பார்வை

2022-11-24 09:50:38
news-image

அடம்பனில் ஓர் ஆற்றல் கலைக்கல்லூரி

2022-11-23 15:47:20
news-image

'நிலைமாற்றத்திற்கான பயணம்' மேடை நாடக விழா

2022-11-23 14:25:16
news-image

‘இலக்கிய வித்தகர்’ விருது பெற்றார் சம்மாந்துறை...

2022-11-22 15:04:03
news-image

திருக்கோணேஸ்வரம் நூல் பற்றி...

2022-11-16 14:40:44
news-image

இராஜேந்திரசோழன் பொலனறுவையில் நிறுவிய 7 சிவாலயங்கள்

2022-11-15 15:05:04
news-image

நிலத்தொடர்பற்ற சமூகம் - சிரேஷ்ட விரிவுரையாளர்...

2022-11-14 12:25:05
news-image

நிசாந்தம் கவிதை நூல் ஒரு கண்ணோட்டம்

2022-11-12 11:22:08
news-image

பாரம்பரியத்தை போற்றும் 'கோவார்' சுவரோவியக் கலை

2022-11-10 21:37:20
news-image

கர்நாடக சங்கீதம் தவிர்ந்த இசைப் பாடல்களை...

2022-11-05 19:51:13
news-image

உங்களது 'நீங்கள்' பயங்கரமானவர்கள்! - கவிதாயினி...

2022-10-27 16:51:30
news-image

காயத்ரி சித்தரின் 89 ஆவது ஜெயந்தி

2022-10-26 16:27:05