ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது இலங்கை குறித்த புதிய பிரேரணையின் இறுதி வரைபு

Published By: Digital Desk 4

23 Sep, 2022 | 06:26 AM
image

(நா.தனுஜா)

இலங்கை தொடர்பில் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் தயாரிக்கப்பட்டுள்ள புதிய பிரேரணையின் இறுதி வரைபு நேற்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், எதிர்வரும் அக்டோபர் மாதம் 6 ஆம் திகதி இப்பிரேரணை மீதான விவாதத்தைத் தொடர்ந்து வாக்கெடுப்பை நடாத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் திகதி ஆரம்பமான நிலையில், அன்றைய தினமே இலங்கை தொடர்பான மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையின் சாராம்சம் வாசிக்கப்பட்டு, அதுகுறித்த விவாதமும் இடம்பெற்றது. அதன் தொடர்ச்சியாக பிரிட்டன் தலைமையில் அமெரிக்கா, கனடா, ஜேர்மனி, வட மெசிடோனியா, மாலாவி மற்றும் மொன்ரனேக்ரோ ஆகிய இணையனுசரணை நாடுகள் இணைந்து 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' என்ற தலைப்பில் தயாரித்துள்ள புதிய பிரேரணையின் வரைபு கடந்த வாரம் பகிரங்கப்படுத்தப்பட்டிருந்தது. அதன்பின்னர் அப்பிரேரணை வரைபு குறித்த கலந்துரையாடல்கள் மற்றும் தர்க்கங்களைத் தொடர்ந்து அதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னரான 2 ஆவது வரைபு இரு தினங்களுக்கு முன்னர் வெளியாகியிருந்த நிலையிலேயே, அதன் இறுதி நேற்றைய தினம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது.

 மேற்படி புதிய பிரேரணையின் 2 ஆவது வரைபு தொடர்பான கலந்துரையாடலொன்று இன்று வியாழக்கிழமை ஜெனிவா நேரப்படி காலை 10.00 மணிக்கு (இலங்கை நேரப்படி பி.ப 2.30) ஜெனிவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கட்டடத்தொகுதியில் நடைபெற்றது. அதன்போது 2 ஆவது வரைபில் மேற்கொள்ளப்படவேண்டிய சில திருத்தங்கள் குறித்த யோசனைகள் முன்வைக்கப்பட்ட நிலையில், அத்திருத்தங்களை மேற்கொள்வதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டதுடன் இறுதி வரைபு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

அதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் அக்டோபர் 7 ஆம் திகதி நிறைவடையவுள்ள நிலையில், இலங்கை தொடர்பில் இணையனுசரணை நாடுகளால் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் இப்புதிய பிரேரணை மீதான வாக்கெடுப்பை அக்டோபர் மாதம் 6 ஆம் திகதி நடாத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

 இணையனுசரணை நாடுகளால் தயாரிக்கப்பட்டிருக்கும் இப்புதிய பிரேரணை வரைபு குறிப்பிட்டுக்கூறத்தக்களவிற்கு வலுவானதாக இல்லை என்றும், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு வலியுறுத்தப்படாமை அதன் பிரதான குறைபாடென்றும் பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டியிருந்த போதிலும், அப்பிரேரணை வரைபில் பெருமளவிற்குத் திருத்தங்கள் எவையும் மேற்கொள்ளப்படமாட்டாது என்றே எதிர்பார்க்கப்பட்டது.

 அதற்கமைய இருதினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட இணையனுசரணை நாடுகளின் புதிய பிரேரணையின் இரண்டாவது வரைபில் மிகவும் வலுவானதும், ஆழமானதுமான முக்கிய திருத்தங்கள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை எனும்போதிலும் சில விடயங்கள் நீக்கப்பட்டு, சில விடயங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறானதொரு பின்னணியில் இப்பிரேரணைக்கு உறுப்புநாடுகளின் ஆதரவைத் திரட்டும் நடவடிக்கைகள் ஜெனிவாவில் தீவிரமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவின் 76ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு...

2025-01-25 17:28:34
news-image

இலத்திரனியல் அடையாள அட்டை திட்டம் பற்றிய...

2025-01-25 17:20:58
news-image

நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தின் புனரமைப்பு செய்யப்பட்ட...

2025-01-25 17:12:59
news-image

கல்கிஸை துப்பாக்கிப்பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான...

2025-01-25 17:22:19
news-image

கிளிநொச்சியில் புதையல் தோண்ட முயற்சித்த 10...

2025-01-25 17:19:54
news-image

சர்வதேச மனித உரிமைகள் மற்றும் உலகலாவிய...

2025-01-25 16:55:25
news-image

முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷனவின் வழக்கு...

2025-01-25 16:46:49
news-image

சுற்றுலாத் துறையை மேம்படுத்த புதிய ரயில்...

2025-01-25 16:51:04
news-image

நுவரெலியாவில் மோட்டார் சைக்கிள் விபத்து ;...

2025-01-25 16:21:27
news-image

கந்தேகெதர செரண்டிப் தோட்டப் பாதையை சீரமைத்து...

2025-01-25 16:22:22
news-image

ஜனாதிபதி நிதியத்தின் பிரதேச மட்டத்திலான சேவைகள்...

2025-01-25 15:32:55
news-image

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண...

2025-01-25 15:31:49