சினைப்பையை அகற்றலாமா..?

By Vishnu

22 Sep, 2022 | 08:50 PM
image

இன்றைய சூழலில் எம்முடைய பெண்மணிகள் வயது மூப்பின் காரணமாகவும், மாதவிடாய் நின்ற பிறகும், அவர்களுக்கு பல்வேறு வகையினதான சுகவீனங்கள் ஏற்படுகிறது.

இந்நிலையில் சில பெண்மணிகளுக்கு மருத்துவர்கள் அவர்களுடைய கர்ப்பப்பையை சத்திர சிகிச்சை மூலம் அகற்றுமாறு பரிந்துரைக்கிறார்கள்.

இதன் போது பெரும்பாலான பெண்மணிகள் அவர்களுடைய கர்ப்பப்பையை அகற்றும் போது, சினைப்பையையும் அகற்றி விடுகிறார்கள்.

ஆனால் சினைப்பையை அகற்றும் முன் மருத்துவர்களிடம் ஆலோசனை பெற வேண்டும் என அறிவுறுத்துகிறார்கள்.

மேலும் வளர்ச்சி அடைந்த மருத்துவத் தொழில்நுட்பங்களினால் இன்றைய திகதியில் கர்ப்பப்பையில் ஏற்படக்கூடிய சிக்கல்களை, அதனை நீக்காமலே தீர்வு காண முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

உதாரணமாக ஃபைப்ராய்ட் சிஸ்ட் எனப்படும் கருப்பை கட்டிகளை அதனை மட்டும் பிரத்யேகமாக அகற்றக் கூடிய நவீன சத்திர சிகிச்சைகள் அறிமுகமாகியிருக்கிறது.

சில பெண்மணிகளுக்கு மருத்துவர்கள் அவர்களின் ஆரோக்கியத்தை முன்னிட்டு, கர்ப்பப்பையை அகற்றுமாறு பரிந்துரைப்பார்கள்.

இதனை அகற்றுவதற்கு முன் உங்களுடைய சினைப்பையின் ஆரோக்கியத்தை ஸ்கேன் பரிசோதனை மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் சினைப்பையைப் பாதுகாப்பது அவசியம். 

பெண்மைக்கு காரணமான ஈஸ்ட்ரோஜன் எனும் ஹோர்மோனைச் சுரப்பதைத் தவிர்த்து ஆண்ட்ரோஜன் எனும் ஹோர்மோனும் இங்கு தான் சுரக்கிறது.

இது மாதவிடாய் காலத்திற்குப் பிறகு பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்த பாதிப்பை குறைப்பதற்கும், அவர்களின் மன நிலையை ஆரோக்கியமாக பராமரிப்பதற்கும் பேருதவி செய்கிறது. இதனால் சினைப்பையை அகற்றும் முன் பலமுறை ஆலோசனை செய்து, அதனை தவிர்க்க இயலாத சூழலில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.

டொக்டர் ஸ்ரீதேவி,

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right