விசேட தேவையுடைய இராணுவ வீரர்களின் ஆர்ப்பாட்டத்தின் போது கண் பகுதியில் கண்டைந்ததாக கூறப்படும் இராணு வீரர் ஒருவருக்கு வெளிநாட்டில் வைத்திய சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதனை இராணு ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ரொஷான செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

காயமடைந்ததாக கூறப்படும் இராணு வீரரான மஹிராஜ் என்பவருக்கு கொழும்பு கண் வைத்தியசாலையின் விசேட வைத்தியர்கள் மற்றும் இராணுவ வைத்தியசாலையின் விசேட வைத்தியர்கள் இணைந்து சிகிச்சையளித்து வருவதாக இதன் போது அவர் சுட்டிக்காட்டினார்.