(நெவில் அன்தனி)
இலங்கை டென்னிஸ் சங்கத்தினால் அண்மையில் நடத்தப்பட்ட 107ஆவது தேசிய டென்னிஸ் வல்லவர் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அஷேன் சில்வா, பெணகள் ஒற்றையர் பிரிவில் ருக்ஷிகா விஜேசூரிய ஆகியோர் சம்பியனாகினர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சம்பியனாகக்கூடியவர் என எதிர்பார்க்கப்பட்ட முதல் நிலை வீரர் ஷமல் திசாநாயக்கவை வெற்றிகொண்டே அஷேன் சில்வா சம்பியன் பட்டத்தை சுவீகரித்தார்.
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் 6 - 4, 6 - 4 என்ற புள்ளிகளைக் கொண்ட 2 நேர் செட்களில் வெற்றிகொண்டு அஷேன் சில்வா சம்பியனானார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் சம்பியானக்கூடியவர் என எதிர்பாகர்க்கப்பட்ட முன்னணி வீராங்னை அஞ்சலிகா குரேரா தோல்வி அடைந்து இரண்டாம் இடத்தைப் பெற்றார்.
அஞ்சலிகா குரேராவை இறுதிப் போட்டியில் எதிர்த்தாடிய ருக்ஷிகா விஜேசூரிய 2 - 1 என்ற செட்கள் அடிப்படையில் வெற்றிபெற்று சம்பியனானார்.
முதல் செட்டில் 6 - 1 என்ற புள்ளிகள் அடிப்படையில் ருக்ஷிகா வெற்றிபெற்றார்.
ஆனால், மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய 2ஆவது செட்டில் சமநிலை முறிப்பு முறையில் 7 - 6 என்ற புள்ளிகள் கணக்கில் அஞ்சலிகா வெற்றிபெற்று செட்கள் நிலையை 1 - 1 என சமப்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தீர்மானம் மிக்க 3ஆவது செட்டை 6 - 3 என்ற புள்ளிகள் கணக்கில் தனதாக்கிய ருக்ஷிகா சம்பியன் பட்டத்தை வென்றெடுத்தார்.
ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் யசித்த டி சில்வா - தில்வன் ஹேரத் ஜோடியினர் சம்பியனாகினர். இவர்கள் சத்துரிய நிலவீர - தெஹான் விஜேமான்ன ஜோடியினரை இறுதிப் போட்டியில் 6 - 4, 6 - 3 என்ற புள்ளிகளைக் கொண்ட 2 நேர் செட்களில் வெற்றிகொண்டு சம்பியனாகினர்.
பெண்கள் இரட்டையர் பிரிவில் நெயாரா வீரவங்ச - ஜனாலி மனம்ப்பெரி ஆகிய ஜோடியினரை 2 - 1 செட்கள் அடிப்படையில் வெற்றிகொண்ட ருக்ஷிகா விஜேசூரிய - அஞ்சலிகா குரேரா ஜோடியினர் சம்பியனாகினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM