பாராளுமன்றத்தில் சபாநாயகரின் ஆசனத்தில் அமர்ந்திருந்த பொறியியலாளர் தொடர்பில் விசாரணையை ஆரம்பிக்குமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய ஆலோசனை வழங்கியுள்ளார்.

சபாநாயகரின் ஆசனத்தில் பொறியியலாளர் ஒருவர் அமர்ந்திருந்ததாக ரஞ்சித் அலுவிகாரவால் சபாநாயகரிடம் முறைப்பாடு கையளிக்கப்பட்டதனை தொடர்ந்து குறித்த ஆலோசனையை பாராளுமன்ற பொதுச்செயலாளருக்கு வழங்கியுள்ளார்.

கடந்த 16 ஆம் திகதி பாராளுமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்த பிறகு பொறியியலாளர்  ஒருவர் சபாநாயகரின் ஆசனத்தில் அமர்ந்து, சுத்தப்படுத்துபவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.