பெண்களுக்கு கிட்டாத வாய்ப்பு

By Nanthini

22 Sep, 2022 | 05:17 PM
image

ன்றைக்கு விளையாட்டு என்பது அரிதாகிவிட்டது. படிப்புச் சுமை அதிகமாகிவிட்ட நிலையில், பாடசாலைகளில் விளையாட்டுக்கு என்று ஒதுக்கப்படும் வகுப்பை கூட பாடம் கற்பிக்க எடுத்துக்கொண்டுவிடுகிறார்கள்.

பையன்களுக்கு விளையாடப் பிடித்திருப்பதால், விளையாட வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் விளையாடுகிறார்கள்.

ஆனால், சின்னஞ் சிறுமிகளாக இருக்கும்போது விளையாடும் பெண்களில் பெரும்பாலான பெண்கள் வளரிளம் பருவத்தை எட்டும்போது பதுமைகள் ஆகிவிடுகிறார்கள்.

சிறு வயது முதலே பெண் குழந்தைகளை ஓடாதே, மெதுவாக நட, ஆம்பிளை மாதிரி இல்லாம, மென்மையா அடக்கமா இரு என்று குட்டி குட்டி வளர்த்துவிடுகிறோம். அவர்களும் தொட்டாலே வாடிவிடுகிற அளவுக்கு மென்மையாக வளர்ந்துவிடுகிறார்கள்.

இன்னும் சிலர் கடுமையான உடற்பயிற்சிகளில் ஈடுபட்டால் மென்மைத்தனம் போய்விடும், கறுத்துவிடுவோம் என்றெல்லாம் நம்புகிறார்கள்.

நன்றாகச் சாப்பிட்டு ஓடி, ஆடி, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நினைப்பதை விட, ஒல்லியாக இருப்பதுதான் அழகு என நினைக்கிறார்கள்.

பேச்சில் வழிகிற உற்சாகம், நடப்பது, ஓடுவது போன்ற உடல் ரீதியான செயற்பாடுகளில்  பிரதிபலிப்பதில்லை. இன்றைக்கு வளரிளம் பருவத்தினர்.

அதிலும் குறிப்பாக பெண்கள் உடலை சரியாக பேணாததால் இரத்தசோகை, மாதவிடாய் பிரச்சினைகள், குழந்தைப் பேறு தொடர்பான பிரச்சினைகள் போன்றவற்றால் அவதிப்படுகின்றனர்.

பெண்களுக்கு இது நல்லது என ஒடுக்கி வைப்பதே காலப்போக்கில் அவர்களை சிறுகச் சிறுக வதைக்கும் நோய்களாக மாறிவிடுகிறது. 

வாய்ப்பு வரும்போது என்றில்லாமல் வாய்ப்பை முதலில் உருவாக்கிக்கொள்ளுங்கள், பெண்களே!

முக்கிய செய்திகள்

icon-left
icon-right