(எம்.மனோசித்ரா)
எப்லடொக்சின் எனப்படுவது சோள உற்பத்தியின் போது உருவாகும் ஒரு வகை வைரஸாகும். திரிபோஷா உற்பத்திக்காக சோளத்தைப் பெற்றுக் கொள்ளும் போது இந்த வைரஸின் செறிமானம் 30 சதவீதத்தை விடக் குறைவாகக் காணப்படுகின்றதா என்பது குறித்து அவதானம் செலுத்தப்படுவதோடு, தர பரிசோதனையும் மேற்கொள்ளப்படும்.
எனவே இது வரை விநியோகிக்கப்பட்டுள்ள திரிபோஷா பக்கட்டுக்களில் எந்த பிரச்சினையும் கிடையாது என்பதால், அது குறித்து வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று திரிபோஷா நிறுவனத் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் வியாழக்கிழமை (22) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
திரிபோஷாவானது 66 சதவீதம் சோளம் மற்றும் 32 சதவீதம் சோயா போஞ்சி மற்றும் பால்மா, விட்டமின் உள்ளிட்ட கனிமங்களால் தயாரிக்கப்படுகிறது.
இதில் எப்லடொக்சின் உள்ளடக்கப்படுவதில்லை. எப்பலோடொக்சின் எனப்படுவது சோள உற்பத்தியின் போது உருவாகும் ஒரு வைரசாகும். இந்த வைரஸ் புற்று நோயை ஏற்படுத்தக் கூடியது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
திரிபோஷா உற்பத்திக்கான சோளம் இறக்குமதி செய்யப்படும் போதோ அல்லது உள்நாட்டில் கொள்வனவு செய்யப்படும் போதோ அதன் மாதிரிகள் பெறப்பட்டு தர பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்.
இதன் போது எப்லடொக்சின் வைரஸ் அளவு 30 சதவீதத்தை விடக்குறைவாகக் காணப்பட்டால் மாத்திரமே அவை பெற்றுக் கொள்ளப்படும். 30 சதவீதத்திற்கும் குறைவாகக் காணப்படுபவற்றைக் கொண்டு தாய்மாருக்கான திரிபோஷா தயாரிக்கப்படும்.
எனினும் குழந்தைகளுக்கான திரிபோஷாவை தயாரிக்கும் போது அதற்காகப் பெற்றுக் கொள்ளப்படும் சோளத்தில் எப்லடொக்சின் செறிமானம் ஒரு சதவீதமாகக் காணப்பட்டால் மாத்திரமே அவை பெற்றுக் கொள்ளப்படும்.
மேற்குறிப்பிட்டவாறு தேவைக்கு அதிக எப்லடொக்சின் செறிமானம் காணப்படும் சோளம் திரபோஷா உற்பத்திக்காக பயன்படுத்தப்பட மாட்டாது. அவ்வாறானவற்றை நாம் பல சந்தர்ப்பங்களில் திருப்பி அனுப்பியிருக்கின்றோம்.
இது இவ்வாறிருக்க தற்போது பல்வேறு காரணிகளால் உள்நாட்டில் சோளப் பயர்செய்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. மொனராகலை மாவட்டத்தில் சோள உற்பத்தி 42 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
இவ்வாறு சோள உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளமையின் காரணமாகவே அதனை இறக்குமதி செய்ய வேண்டியேற்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் சோளத்தில் தரமானவற்றைப் பெற்றுக் கொள்வதில் பாரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
வருடாந்தம் திரிபோஷா தயாரிப்பிற்கு 6 இலட்சம் மெட்ரிக் தொன் சோளம் தேவையாகவுள்ளது. எனினும் இவற்றில் சுமார் ஒன்றரை இலட்சம் மெட்ரிக் தொன் சோளத்தை மாத்திரமே உள்நாட்டிலிருந்து பெற்றுக் கொள்ளக் கூடியதாகவுள்ளது.
எஞ்சியவற்றை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமையே காணப்படுகிறது. இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் போது தரமான சோளத்தைப் பெற்றுக் கொள்வதிலும் சிக்கல் நிலைமை காணப்படுகிறது.
எவ்வாறிருப்பினும் இறக்குமதி செய்யப்படும் கொள்கலன்களில் அனைத்து மூடைகளிலுமுள்ள சோளம் தர பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.
இவ்வாறு ஒரு பரிசோதனை அறிக்கையைப் பெற்றுக் கொள்வதற்கு சுமார் 60 000 ரூபா அல்லது அதற்கு அதிக தொகையை செலுத்துகின்றோம்.
இதனை அரசாங்கம் ஒரு சேவையாகவே முன்னெடுக்கின்றது. எனவே கர்பிணிகள் , பாலூட்டும் தாய்மார் மற்றும் சிறுவர்கள் என எவருக்கும் ஆபத்தான அல்லது எப்லோடொக்சின் செறிமானம் அதிகமாகவுள்ள திரிபோஷா வழங்கப்படவில்லை. எனவே அண்மையில் இவற்றைப் பெற்றுக் கொண்டவர்கள் அநாவசிய அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ளத் தேவையில்லை.
கடந்த மாதம் இறக்குமதி செய்யப்பட்ட 33 சோளம் அடங்கிய கொள்கலன்களில் தர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு , அவற்றில் 21 மாத்திரமே ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஏனையவரை நிராகரிக்கப்பட்டுள்ளன. திரிபோஷா தயாரிக்கப்பட்டதன் பின்னர் அதில் எப்பலோடொக்சின் வைரஸ் விருத்தியடைவதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவாகும்.
எனினும் பாவனைக்காக பக்கட் உடைக்கப்பட்டு , அதன் பின்னர் அதனை முறையாக பேணாமல் அல்லது காற்று , பூச்சிகள் உட்புகக் கூடியவாறு பாதுகாப்பின்றி வைத்திருந்தால் பாதிப்புக்கள் ஏற்படக் கூடும்.
தயாரிக்கப்படும் திரிபோஷா பக்கட் ஒன்றின் ஆயுட்காலம் 4 மாதங்களாகும். நாளொன்றுக்கு 50 கிராம் என்ற அடிப்படையிலேயே மாதமொன்றுக்கு 2 பக்கட்டுக்கள் வழங்கப்படுகின்றன.
ஏதேனுமொரு காரணத்திற்காக இவற்றை பகிர்ந்தளிக்க முடியாமல் , அதன் காலாவதி திகதி அண்மிக்குமாக இருந்தால் ஒரு மாதத்திற்கு முன்னரே அவற்றை நாம் மீளப் பெற்று விடுவோம்.
மீளப் பெறுபவை அழிக்கப்படுமே தவிர மீள விநியோகிக்ப்பட மாட்டாது. எனவே திரிபோஷாவைப் பெற்றுக் கொள்ளும் எவரும் இது தொடர்பில் வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM