ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு உலகத்தமிழர் அமைப்புக்களின் பேரவையின் அழுத்தம்

By T. Saranya

22 Sep, 2022 | 05:07 PM
image

(நா.தனுஜா)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படவுள்ள புதிய தீர்மானத்தில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாராப்படுத்துமாறு புதிய வலியுறுத்துவதற்குத் தவறும்பட்சத்தில், அதனைத் தமிழ்மக்களுக்கு அதிருப்தியளிக்கக்கூடிய - தமிழர்களுக்கான நீதியைப் புறக்கணிக்கக்கூடிய விடயமாகவே தாம் கருதுவதாக 9 புலம்பெயர் தமிழர் அமைப்புக்களை உள்ளடக்கிய உலகத்தமிழர் அமைப்புக்களின் பேரவை தெரிவித்துள்ளது. 

அதுமாத்திரமன்றி இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கான நடவடிக்கையைப் பாதுகாப்புச்சபையின் ஊடாக முன்னெடுக்குமாறும் அப்பேரவை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையை வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்கத்தமிழர் கூட்டிணைவு, உலகத்தமிழ் இயக்கம், ஒட்டாவா தமிழ் அமைப்பு, குவேபெக் தமிழ் அபிவிருத்தி அமைப்பு, உலகத் தமிழ் அமைப்பு, தமிழினப்படுகொலை நினைவுகூரல் அமைப்பு, ஏ.பி.சி தமிழ் ஒளி, இலங்கை தமிழ் சங்கம், சிவில் செயற்பாடுகளுக்கான கனேடியத் தமிழர் மையம் ஆகிய 9 அமைப்புக்களை உள்ளடக்கிய உலகத்தமிழர் அமைப்புக்களின் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரில் தமிழ்மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட குற்றங்கள் தொடர்பில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாராப்படுத்துமாறு ஐ.நா பாதுகாப்புச்சபையை வலியுறுத்துகின்ற தீர்மானமொன்று நிறைவேற்றப்படுமென நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

அத்தீர்மானத்தில் ரோம் சட்டத்தின் 13 ஆவது சரத்து மற்றும் ஐக்கிய நாடுகள் சாசனத்தின் 7 ஆம் பிரிவு என்பன மேற்கோள்காண்பிக்கப்படவேண்டும். இது போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான மீறல்கள், இனப்படுகொலை என்பன நடைபெற்ற சூழ்நிலை தொடர்பில் பாதுகாப்புச்சபையினால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் சட்டவாதிக்குத் தகவல் வழங்கப்படுவதற்கு இடமளிக்கும்.

ஆனால் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாராப்படுத்துமாறு புதிய தீர்மானத்தில் வலியுறுத்துவதற்குத் தவறும்பட்சத்தில், அதனைத் தமிழ்மக்களுக்கு அதிருப்தியளிக்கக்கூடிய - தமிழர்களுக்கான நீதியைப் புறக்கணிக்கக்கூடிய விடயமாகவே நாம் கருதுகின்றோம்.

இலங்கை அதிகாரிகளால் இழைக்கப்பட்ட இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான மீறல்களுக்காக அவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு இலங்கைவாழ் தமிழர்களில் பெரும்பான்மையானோர், உலகளாவிய ரீதியிலுள்ள மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் சர்வதேச சமூகத்தையும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையையும் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றனர்.

2009 ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கத்தினால் நிகழ்த்தப்பட்ட குற்றங்களின் கொடூரமான தன்மையென்பது கற்பனைக்கு அப்பாற்பட்டதாகும். அவை தமிழர்களுக்கு எதிரான உச்சபட்ச வெறுப்புணர்வைக் காண்பிக்கின்றன. இவற்றில் சில மீறல்கள் பிரிட்டனின் சனல் - 4 ஊடகத்தினால் ஆவணப்படுத்தப்பட்டன.

கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உள்ளக விசாரணை அறிக்கை இனப்படுகொலையைத் தடுப்பதற்கான முயற்சியோ அல்லது அதுகுறித்த ஆதாரங்களை ஆவணப்படுத்துவதற்கான முயற்சியோ இல்லை (குறைந்தளவிலான முயற்சி) என்பதைக் காண்பிக்கின்றது.

தாம் இழைத்த குற்றங்களுக்காகத் தாம் ஒருபோதும் தண்டிக்கப்படமாட்டோம் என்ற நம்பிக்கை இலங்கை இராணுவத்தினருக்கு இருப்பதுடன், தற்போதுவரை அது உண்மை என்று நிரூபணமாகியிருக்கின்றது.

போர் முடிவிற்குக்கொண்டுவரப்பட்டிருப்பினும் சிவில் சுதந்திரத்தின்மீது விதிக்கப்படும் தொடர்ச்சியான மட்டுப்பாடுகளின் ஊடாக ஏற்கனவே பாதிக்கப்பட்ட தமிழர்கள் மற்றும் சாட்சியாளர்கள் மேலும் ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்படுவதுடன் அவர்களின் குரல்கள் நசுக்கப்படுகின்றன.

இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கையின் குற்றங்களை மூடிமறைப்பதற்கு சில பூகோள அரசியல் சக்திகளால் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக புலம்பெயர் தமிழர்கள் சந்தேகிக்கின்றனர். 

கடந்த 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தமது தீர்மானத்தையே ஐக்கிய நாடுகள் சபையினால் அமுல்படுத்தமுடியாத நிலையில், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துதல் அல்லது சர்வதேச தீர்ப்பாயமொன்றை ஸ்தாபித்தல் ஆகியவையே தற்போது ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் வசமுள்ள தெரிவுகளாகும்.

தமிழினப்படுகொலை தொடர்பில் நீதியைப் பெற்றுக்கொள்வதில் புலம்பெயர் தமிழர்கள் உறுதியாக இருப்பதுடன் அதனை முன்னிறுத்தி சர்வதேச கட்டமைப்புக்களுடன் ஒன்றிணைந்து அயராது பணியாற்றத்தயாராக இருக்கின்றனர்.

 

இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கான நடவடிக்கையைப் பாதுகாப்புச்சபையின் ஊடாக முன்னெடுக்குமாறும், அரசியலமைப்பிற்கான 6 ஆவது திருத்தத்தை நீக்குவதுடன் தமிழர்களின் கருத்துவெளிப்பாட்டுச்சுதந்திரத்தை உறுதிப்படுத்தும்படி இலங்கையை வலியுறுத்துமாறும், இலங்கையில் தற்போது நிகழும் மனித உரிமை மீறல்கள் மற்றும் ஒடுக்குமுறைகள் தொடர்பில் கண்காணிப்பதற்கும் விசாரணைகளை மேற்கொள்வதற்குமென விசேட அறிக்கையாளரொருவரை நியமிக்குமாறும், தமிழர்கள் தமது சுயநிர்ணய உரிமையை அனுபவிப்பதற்கு ஏதுவான சூழ்நிலையை உருவாக்குமாறும் நாம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையை வலியுறுத்துகின்றோம் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முகநூல் காதல் ; காதலியின் புதிய...

2022-09-29 16:07:39
news-image

சனத் நிஷாந்தவுக்கு எதிராக குற்ற பகிர்வு...

2022-09-29 15:56:10
news-image

மஹிந்த தலைமையில் நவராத்திரி பூஜை :...

2022-09-29 16:07:37
news-image

நாடு வங்குரோத்து நிலையை அடைந்து விட்டதாக...

2022-09-29 15:04:27
news-image

மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை...

2022-09-29 14:07:25
news-image

இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்து...

2022-09-29 13:06:34
news-image

பாதுகாப்பு பதில் அமைச்சருக்கும் உயர் அதிகாரிகளுக்கும்...

2022-09-29 13:44:47
news-image

மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்த இளைஞன்...

2022-09-29 13:44:06
news-image

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து...

2022-09-29 13:41:48
news-image

திலீபனின் நினைவேந்தலில் குழப்பங்கள் ஏற்பட்டிருக்கக்கூடாது -...

2022-09-29 13:40:08
news-image

தேசிய சபையில் கலந்துகொள்ளப் போவதில்லை -...

2022-09-29 13:39:12
news-image

இலங்கையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப பல வருடங்களோ,...

2022-09-29 13:38:44