(எம்.எம்.சில்வெஸ்டர்)
இலங்கைக்கு கடந்த வாரம் இறக்குமதி செய்யப்பட்ட 10 கொள்கலன்கள் அடங்கிய சோளத்தில் எஃபலடொக்சின் அளவு அதிகமாக காணப்பட்டதால் குறித்த 10 கொள்கலன்கள் அடங்கிய சோளத்தை திரிபோஷா நிறுவனம் நிராகரித்துள்ளது.
இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட சோளத்தில் திரிபோஷா உற்பத்திக்கான சிறந்த தரம் அதில் அடங்கப்பட்டிருக்கவில்லை என திரிபோஷா நிறுவனத்தில் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.
பொதுவாக கர்ப்பிணித் தாய்மார்களுக்கு திரிபோஷா உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் சோளத்தில் உள்ளே எஃபலடொக்சின் அதிகபட்ச அளவு ஒரு பில்லியனுக்கு முப்பது பாகங்கள் ஆகும்.
மேலும், குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷா தயாரிக்கப் பயன்படும் சோளத்தில் இருக்க வேண்டிய எஃபலடொக்சின் அளவு ஒரு பில்லியனுக்கு ஒரு பங்கு என குறிப்பிடப்பட்டுள்ளது.
திரிபோஷா உற்பத்திக்கு தேவையான தரமான சோளம் கிடைக்காத காரணத்தினால், குழந்தைகளுக்கான திரிபோஷா எட்டு மாதங்களாக உற்பத்தி செய்யப்படவில்லை என திரிபோஷ நிறுவனத்தின் சிரேஷ்ட பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார். இலங்கையில் 74 வருடங்களாக திரிபோஷ திரிபோஷ விநியோகம் செய்து வருவதாகவும், திரிபோஷாவுக்கான இவ்வாறானதொரு நெருக்கடியை எதிர்கொள்வது இதுவே முதல் தடவை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM