உதைபந்தாட்ட சம்மேளனத்தின் புதிய யாப்பு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்

Published By: Vishnu

22 Sep, 2022 | 03:17 PM
image

(செய்திப்பிரிவு)

இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் புதிய அரசியலமைப்பு இன்று (22) வியாழக்கிழமை நடைபெற்ற விசேட மகாசபை கூட்டத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை விட அதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஒரு லீக்கிற்கு மூன்று வாக்குகள் வீதம் வழங்குவது தொடர்பான சரத்துக்கு ஆதரவாக 48 வாக்குகள்  அளிக்கப்பட்டதோடு எதிராக வாக்குகள் எதுவும் அளிக்கப்படவில்லை.

13 பேர் வாக்களிக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. இந்த சரத்து தவிர மற்ற அனைத்துக் சரத்துகளுக்கு ஆதரவாக 61 வாக்குகள் கிடைத்ததோடு எவரும் எதிராக வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வத்தளை பெகசிஸ் ஹோட்டலில் இந்த  விஷேட பொதுச் சபைக் கூட்டம் இடம்பெற்றது. யாப்பு வரைவை மேற்பார்வை செய்வதற்காக  சர்வதேச உதைபந்தாட்ட சம்மேளனத்தின் இரு பிரதிநிதிகளும் ஆசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தின் பிரதிநிதிகளும் இந்த  பொதுக் கூட்டத்தில்  கலந்துகொண்டனர்.

இந்த புதிய யாப்பு நிறைவேற்றப்பட்டதையடுத்து   விளையாட்டுத்துறை  அமைச்சரின் விசேட அனுமதியைப்  பெற்று எதிர்வரும் ஒக்டோபர் 23 ஆம் திகதியன்று   நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேர்தலையொட்டி ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதிகள் இருவர் மற்றும நிர்வாக அதிகாரி ஒருவர் உள்ளிட்ட சுயாதீன தேர்தல் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58