முடியாட்சிக்கு எதிராக அவுஸ்திரேலியாவின் பல நகரங்களில் ஆர்ப்பாட்டம்

By Rajeeban

22 Sep, 2022 | 03:07 PM
image

அவுஸ்திரேலியாவின் பல நகரங்களில் முடியாட்சியை நீக்கவேண்டும் என கோரும் போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

இரண்டாவது எலிசபெத் மகாராணியை நினைவுகூறும் தேசிய நினைவு நிகழ்வு அவுஸ்திரேலியாவில் இடம்பெற்று சில மணித்தியாலங்களின் பின்னர் முடியாட்சியை நீக்கவேண்டும் என கோரும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

பிரிஸ்பேர்ன், சிட்னி, மெல்பேர்ன் மற்றும் கான்பெரா ஆகிய நகரங்களில் முடியாட்சிக்கு எதிரானவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

சிலர் அவுஸ்திரேலிய கொடியை எரித்துள்ளனர்.

பிரிஸ்பேர்ன் சிபிடியில் நூற்றுக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் உரைகளின் பின்னர் செய்திதாளொன்றை கொழுத்தி அதனை பயன்படுத்தி தேசியக்கொடிக்கு தீயிட்டுள்ளனர்.

அவுஸ்திரேலிய தினத்தை ஒழியுங்கள் எனதெரிவிக்கும் ஆடைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் அணிந்திருந்தனர்.

மன்னர் இல்லை பொலிஸ் இல்லை முதலாளித்துவாதிகள் இல்லை மாற்று சோசலிஸ்ட்கள் என்ற பதாகைகளையும் காணமுடிந்தது.

அவுஸ்திரேலியா எப்போதும் அபோர்ஜினிய மக்களின் பூமியாகவேயிருக்கும் என அவர்கள் கோசமிட்டுள்ளனர்.

இதேவேளை முடியாட்சியை ஒழிக்கவேண்டும் என்ற கோசத்துடன் சிட்னியின் நகரமண்டபத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

டவுன்ஹோலின் படியிலிருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் உரையாற்றியவேளை பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தியிருந்தனர்.

இறையாண்மை ஒருபோதும் கைவிடப்படவில்லை, பிரிட்டனின் ஈவிரக்கமற்ற காலனித்துவம் தொடர்கின்றது எனது மன்னரும் மகாராணியும் கறுப்பானவர்கள் போன்ற  வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் அபோர்ஜினிய மக்களின் படங்களையும் ஆர்ப்பாட்டத்தில்காணமுடிந்தது.

கடும் வெயில் ஒருநாள் பொதுவிடுமுறைக்கு மத்தியிலும் நூற்றுக்கணக்கானவர்கள் மெல்பேர்னின் சிபிடியில் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு தலைமை வகித்த செனெட்டர் லின்டா தனதுகையை சிவப்பு பெயின்டிற்குள் வைத்த பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்களின் முன்னிலையில் உரையாற்றுகையில் முடிக்குரியவர்களின் கரங்களில் இரத்தக்கறை என தெரிவித்தார்.

ஒவ்வொரு நாளும் எங்கள் மக்கள் இறக்கின்றனர் முடியின் கால் எங்கள் கழுத்தில் இருக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த மண்ணின் முதல் பிரஜைகள் என்ற அடிப்படையில் நாங்கள் இங்கு போராடவந்துள்ளோம்,நாங்கள் ஒருபோதும் எங்கள் இறைமையை விட்டுக்கொடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எரிக்கப்பட்ட அவுஸ்திரேலிய கொடியின் முன்னாள் அவுஸ்திரேலியாவின் பூர்வீககுடியை சேர்ந்த செனெட்டர் உரையாற்றியவேளை மக்கள் கைதட்டி ஆர்ப்பரித்துள்ளனர்.

உங்களிற்கு தெரியுமா உங்களிற்கு தெரியாது ஏனென்றால் ஊடகங்கள் அதனை தெரிவிப்பது இல்லை, நாங்கள் நாளாந்தம் பொலிஸாரின் பிடியில் எத்தனை உயிர்களை இழக்கின்றோம் தெரியுமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

2022 இல் 20000 அபோர்ஜினிய குழந்தைகள் சிறுவர்கள் களவாடப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள அவர் எங்கள் மக்கள் துயரத்தையும் இனப்படுகொலையையும் அனுபவிக்க காரணமானவருக்கு நீங்கள் அஞ்சலி செலுத்துகின்றீர்களா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதில் இந்தியா - ஜப்பான்...

2022-09-29 16:28:26
news-image

பிரதமர் மோடியின் ஆலோசனைக்கு பிளிங்கன் பாராட்டு

2022-09-29 16:30:59
news-image

உலகத்துக்கான பாதுகாப்பு தயாரிப்புகளை உருவாக்குங்கள் -...

2022-09-29 16:22:02
news-image

சிட்னியில் ஆபத்தான கரும்பு தேரைகளால் அச்சம்

2022-09-29 14:57:25
news-image

ஆங் சாங் சூகியின் பொருளாதார ஆலோசகரான...

2022-09-29 14:31:59
news-image

உக்ரேனில் கைப்பற்றிய பகுதிகளை இணைக்கிறது ரஷ்யா

2022-09-29 13:08:24
news-image

பாக்கிஸ்தான் பொலிஸார் எதிர்நோக்கும் புதிய நெருக்கடி-...

2022-09-28 16:04:03
news-image

தலைமுடியை வெட்டி ஹிஜாப் போராட்டத்திற்கு ஆதரவு...

2022-09-28 16:02:57
news-image

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு...

2022-09-28 15:11:59
news-image

சவுதி அரேபியாவின் பிரதமராக இளவரசர் முகமது...

2022-09-28 11:17:49
news-image

வீட்டுக் காவல் வதந்திக்கு பிறகு முதன்...

2022-09-28 10:44:04
news-image

ரஷ்யாவில் கொரோனா தொற்று திடீர் அதிகரிப்பு

2022-09-28 09:21:33