கை மீறிப் போகும் முன் மன்னாரை பாதுகாப்போம் !

By Vishnu

22 Sep, 2022 | 08:07 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

மன்னார் அரை வெப்ப வலயத்தில் அமைந்துள்ள சதுப்பு நிலங்கள், கடனீரேரிகள், முற்புதர்கள், பற்றைக்காடுகள், கடற்கரை, ஆழமற்ற கடல், கடல் புற்கள், சேற்றுத்தரைகள் மற்றும் மணல்தரைகள் போன்ற பல்வேறு சுற்றாடல் தொகுதிகளைக் கொண்டதும் இயற்கை வளங்கள் நிறைந்ததுமான ஓர் அறிய பகுதியாகும்.

இந்த தீவின் தனித்துவம் காரணமாக இலட்சக்கான பறவைகள் வெளிநாடுகளிலிருந்து வருகின்றன. அந்தப் பறவைகளின் எச்சங்களை மீன்கள் உணவாக உட்கொள்வதால் மீனவர்கள் அப்பகுதியில் மிகுதியான மீன் அறுவடை கிடைக்கிறது.

அது மாத்திரமின்றி பறவைகளை கண்டு ரசிப்பதற்கு உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் படையெடுப்பு அதிகரித்து வருகிறது.

மன்னார் பொருத்தமற்ற கருத்திட்டங்களை ஆரம்பித்து அழிவை உண்டு பண்ணக்கூடிய ஒரு தீவு அல்ல. பொருத்தமில்லாத மற்றும் முறைசாரா அபிவிருத்தி திட்டங்களாலும் மன்னார் தீவு பெரும் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது.

மன்னார் தீவில் பல இடங்கள் கடல்மட்டத்திற்குக் கீழாகவும் சிறிய நிலப்பரப்பில் அமைந்திருப்பதாலும் இங்கு மணல் அகழ்ந்தால் நிலத்தின் உறுதித்தன்மை அற்றுப்போதல், அகழ்வின் போது கடல் நீர் நிலத்தில் புகுந்து நன்னீருடன் கலந்து விடுதல் மற்றும் பருவநிலை மாற்றத்தால் உயரும் கடல் மட்டம் இந்தத் தீவை முழுவதுமாக கடலில் மூழ்கடித்து விடும் அபாயம் உள்ளது.

பெரிய அளவில் இறால் வளர்ப்புக்காக பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் மற்றும் இறால் குழிகளிலிருந்து அகற்றப்படுகின்ற கழிவுநீர் எவ்விதத்திலும் சுத்திகரிப்பு செய்யப்படாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

வனவிலங்கு புகலிட வலயங்களுக்கு சொந்தமான ஒதுக்குப் பிரதேசங்களில் வெளியேற்றப்படுவதால் பற்றீரியா மற்றும் வைரஸ் நோய்க்காரணிகள் உருவாவதோடு அங்குள்ள நீரின் கட்டமைப்பினையும் மாற்றிவிடுகின்றன.

இதனால் மீன்களுக்கும் உட்பட உயிரினங்களுக்கும் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு சொந்தமான மேலும் சுமார் 1,500 ஏக்கர் நிலப்பரப்பில் இறால் வளர்ப்பை மேற்கொள்ள யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மீனவர்கள் இலங்கையில் கடல் வாழ் உயிரினங்களின் அதிகமாக காணப்படுகின்ற ஆழமற்ற கடற்பரப்பில் கடற்படுகை மூலம் முற்றாக அழித்து அங்குள்ள வளங்களை சூறையாடுகிறார்கள்.  இதன் காரணமாக இனவிருத்திக்குப் பயன்படும் இடங்கள், மீன் முட்டைகள் அழிவடைதல் அத்துடன் கடல் வாழ் உயிரினங்களும் அழிவடையும். அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் உள்ளூர் மீனவர்கள் மற்றும் அது சார்ந்த அனைத்து உற்பத்திகளும் முற்றாக தடைப்பட்ட வாய்ப்புள்ளது.

காற்றாலை மின் நிலையங்கள் ஆயிரக்கான பறவைகள் நாட்டிற்குள் நுழையும் பகுதியில் பெரிய காற்றாலைகளை நிறுவுவது பறவைகள் நாட்டிற்குள் நுழைவதற்கான கடுமையான இருப்பதோடு இயற்கை வடிகாலமைப்புத் தொகுதியின் தொழிற்பாட்டிற்கு இடையூறாக அமைந்து விடுவதால் அது திடீர் வெள்ளை பெருக்கத்திற்கு வழிவகுக்கும்.

மேலும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் கீழ் முன்னெடுக்கப்படும்   ;Iroad  தெருக்களை அமைக்கும் போது பாலங்களும் மதகுகளும் முறையாக அமைக்கப்படாததால் வற்றுப்பெருக்கு நிகழும் போது நீர்வழிப் போக்குவரத்திற்கு தடை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் அப்பகுதி நீரில் மூழ்கலாம். ஆசிய அபிவிருத்தி வங்கியின் சூழல் மற்றும் சமூகம் சார்ந்த சட்ட விதிகளுக்கு முரணாக இப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

பெட்ரோலிய அகழ்வு நடவடிக்கையானது மன்னார் கடற்பரப்பை மாசுப்டுத்துவதோடு அகழ்வு ஏற்படுத்தும் அதிர்வு காரணமாக மீன்கள் அப்பகுதியை விட்டு வெளியேறுவதால் மீனவச் சமூகத்தினர் கடுமையாக பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.

இவ்வாறு மன்னார் தீவு அபிவிருத்தி எனும் போர்வையில் பாரியளவில் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள இந்த சந்தர்ப்பத்தில் மன்னாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் இல்மனைற்றுக்கான மண்ணகழ்வு நடைமுறைப்படுத்தபடுமாயின் அதுவே மன்னார் மக்களினதும் அவர்களது வாழ்வாரத்தினதும் சூழலினதும் முடிவிற்கான அறிகுறியாகும்.

TSL  எனும் அவுஸ்திரேலிய நிறுவனமும் அவர்களின் இலங்கைக்கான பங்குதாரர்களும் இணைந்து மன்னார் நிலப்பரப்பில் சுமார் 200 கிலோ மீட்டர்கள் பரப்பில் மண்கழ்விற்கு திட்டமிட்டுள்ளனர். சுமார் 50 வருடங்களிற்கு மன்னாரில் இருந்து மண்ணை அகழ்வதே இத்திட்டமாகும்.

ஏற்கனவே மன்னார் தீவனாது 63 வீதம் கடல் மட்டத்திற்கு கீழே காணப்படுவதால் இத்திட்டம் நடைமுறைப்படுத்தபடுமாயின் கடல் நீர் உட்புகுந்து மன்னார் தீவை மக்கள் வாழ முடியாததாக மாற்றி விடும்.

மன்னார் தீவின் மொத்த பரப்பளவான 126 கிலோ மீட்டர் பரப்பில் 78 கிலோ மீட்டர் இற்கும் மேலான பகுதியில் மண்ணகழ்வை செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது கிட்டத்தட்ட மன்னார் தீவின் 62 வீதம் ஆகும். அதே போல் மன்னார் நிலப்பரப்பிலும் 50 கிலோமீட்டர் பகுதியில் இல்மனைற்று மண்ணகழ்வை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் தலைமன்னார், பேசாலை, கரிசல், நடுக்குடா மற்றும் தாழ்வுபாடு உட்பட 20 இற்கும் மேற்பட்ட கிராமங்களை இல்லாமல் ஆக்கிவிடும்.

இத்திட்டத்தை ஆராய்வதற்காக 2015 ஆம் முதல் தனியார் காணிகளில் சுமார் 4,000 ஆழ்துளை கிணறுகள் காணி உரிமையாளர்களுக்கு தெரியாத வகையில் இடப்பட்டு மண் மாதிரிகள் பெறப்பட்டுள்ளன. நிறுவனம் இது ஒரு பாதிப்பு குறைவான எளிமையான திட்டம் என்று தெரிவித்துள்ள போதும் இது உண்மைக்கும் புறம்பானதாகும்.

மேலும் இது தொடர்பாக  அதிகாரிகள் மற்றும் பொலிஸாரிடம் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட போதிலும்  உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வில்லை. இந்நிலையில் கை மீறி போகும் முன் மன்னார் தீவை பாதுகாப்பதற்கு குறித் வேலைத்திட்டத்தை உடன் நிறுத்துமாறும்  ஜனாதிபதி உட்பட உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மன்னார் இல்மனைற்று மண்ணகழ்வை உடன் நிறுத்த வேண்டும்; மக்களின் வாழ்வாதாரம் மற்றும் சூழலின் அழிவுக்கு வழிவகுக்கும்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை டிசம்பர் என்கின்றது - உறுதியாக...

2022-09-29 15:08:23
news-image

யார் இந்த பொன்னியின் செல்வன்?

2022-09-29 15:25:42
news-image

முதல் முறையாக விண்கல்லை திசை திருப்பிய...

2022-09-29 13:18:27
news-image

உடையால் பற்றி எரியும் ஈராக் :...

2022-09-29 13:18:49
news-image

கஞ்சாவை சட்டபூர்வமாக்குவதால் யாருக்கு இலாபம் ?

2022-09-29 12:26:33
news-image

மீண்டும் களத்தில் இறங்கும் சந்­தி­ரிகா

2022-09-29 12:26:16
news-image

சிறுவர்கள் பட்டினியால் பாதிக்கப்படுவது குறித்த தகவல்...

2022-09-28 12:40:54
news-image

இலங்கையின் வர்த்தக நாமம் கஞ்சா…?

2022-09-28 10:14:28
news-image

மலையக சமூகம் தொடர்பில் ஐ.நா. பிரதிநிதியின்...

2022-09-28 10:10:48
news-image

அடையாளம் தான் துறப்போம். எல்லா தேசத்திலும்...

2022-09-27 09:27:02
news-image

ஐ.எம்.எப். கடனை தாண்டிய இந்தியாவின் டொலர்...

2022-09-26 10:53:34
news-image

இந்தியா இலங்கைக்கு பலமாக இருக்கின்றது :...

2022-09-25 15:44:19