இலங்கையைச் சேர்ந்த 32 பேர் சிரியாவில் உள்ள ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் இணைந்துள்ளதாக அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் வரவு செலவுத்திட்டத்தின் 2 ஆம் வாசிப்பின் 5 ஆம் நாள் விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் 4 குடும்பங்களைச் சேர்ந்த 32 பேர் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்துள்ளதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது.

இது தொடர்பான விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் இனவாதம் அடிப்படையில் நாட்டில் செயற்படுவோருக்கு இனியும் இடம் வழங்கப்படாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.