(எம்.வை.எம்.சியாம்)
சிறு பிள்ளைகள் மற்றும் தாய்மார்களுக்கு ஆபத்தான முறையில் எப்லடொக்சின் அடங்கிய திரிபோஷா வழங்கப்பட்டமை தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்த வேண்டும் என்று சுகாதார அமைச்சிடம் பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன வலியுறுத்தியுள்ளார்.
எப்லடொக்சின் அடங்கிய திரிபோஷா வழங்கப்பட்டமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தமை குறித்து பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன சுகாதார அமைச்சுக்கு அழைக்கப்பட்டு இருந்த போதே இதனை அவர் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
சுகாதார வைத்திய நிலையங்களில் இருந்து திரிபோஷா மீள பெறுவது தொடர்பில் என்னிடம் வினவப்பட்டது. திரிபோஷா தொடர்பில் இந்த சம்பவம் கடந்த டிசம்பர் மாதம் முதல் தொடர்ச்சியாக எழுகின்ற பிரச்சினையாகும்.
டிசம்பர் மாதம் திரிபோஷா மாதிரிகள் பெறப்பட்டு எப்லடொக்சின் உரிய அளவினை விட அதிகமாக காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.
இலங்கை கட்டளை பணியகங்களின் தரங்கள் இவற்றிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த தரங்களுக்கு அமைவாக 3 வயதுகளுக்கு குறைந்த சிறுகுழந்தைகளுக்கு எப்லடொக்சின் பில்லியனுக்கும் குறைந்த அளவே பயன்படுத்த வேண்டும். 3 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் பில்லியனுக்கும் 30 பங்கை விட குறைந்த அளவையே வழங்க வேண்டும்.
எந்த வகையிலும் நான் தவறான கருத்தினை வெளியிடவில்லை. ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் இவ்வாறான விடயம் ஒன்று நடந்தமை தொடர்பில் உணவு ஆணையாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
திரிபோஷா உற்பத்தி முகாமையாளர், பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் என்னுடன் உரையாடினார்கள் இத்தகைய தவறு ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கூறினார்கள்.
செப்டம்பர் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் உற்பத்தி செய்யப்படுகின்ற மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு முடிவுகள் கிடைக்க பெற்ற பின்னர் விநியோகிக்கப்படுவதாக அவர் கூறினார்கள்.
மேலும் சிறு பிள்ளைகள் மற்றும் தாய்மார்களுக்கு எப்ளடொக்ஷின் வழங்க வேண்டிய அளவினை விட அதிகளவில் வழங்கிய அதிகாரிகள் இருந்தால் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு நாம் அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM