பாராளுமன்ற செயற்பாடுகள் அடிப்படை ஜனநாயக கொள்கைக்கு விரோதமானது - ஜி.எல் பீரிஸ்

By Vishnu

22 Sep, 2022 | 08:03 PM
image

(இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம்.வசீம்)

அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் 13 உறுப்பினர்களின் பேச்சுரிமை திட்டமிட்ட வகையில் முடக்கப்பட்டுள்ளது. எமது உரிமையை பாதுகாக்க சர்வதேச நிறுவனங்களிடம் முறைப்பாடளித்துள்ளோம். பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் அடிப்படை ஜனநாயக கொள்கைக்கு விரோதமானதாக உள்ளது என பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார்.

பாராளுமன்றில் 22 ஆம் திகதி வியாழக்கிழமை வரபிரசாத கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

மக்களின் பிரதிநிதிகளின் பேச்சுரிமையை முடக்கி தற்போதைய பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது.நாட்டு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் உண்மை தன்மையுடன் சபையில் உரையாற்றுவதற்காகவே மக்கள் தமக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்கிறார்கள்.

அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றில் சுயாhதீனமாக செயற்படும் 13 உறுப்பினர்கள் பாராளுமன்றில் உரையாற்றுவதற்கு கடந்த மாதம் 31ஆம் திகதி முதல் வாய்ப்பு வழங்கப்படவில்லை.திட்டமிட்ட வகையில் எமது பேச்சுரிமை முடக்கப்படுகிறது.

அரச வருமானத்தை அதிகரித்துக்கொள்வது தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் நேற்று முன்தினம் இடம்பெற்றது.குறித்த விவாதத்தில் பல விடயங்களை முன்வைத்த கோப் குழுவின் முன்னாள் தலைவர் சரித ஹேரத் தயாராகியிருந்த நிலையில் உரையாற்றுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

விவாதத்தில் உரையாற்ற 13 உறுப்பினர்களுக்கு போதுமான காலம் வழங்கப்பட வேண்டும் என உங்களிடம்(சபாநாயகர்) பலமுறை வலியுறுத்தினோம்.எமது கோரிக்கையை நிறைவேற்ற தாங்கள் முன்னெடுத்த முயற்சிகள் பிற சக்திகளினால் தடைப்பட்டதை நன்கு அறிவோம்.

எமது பேச்சுரிமையை தொடந்து விட்டுக்கொடுக்க முடியாது என்ற காரணத்தினால் சர்வதேசத்திடம் முறையிட தீர்மானித்தோம் அதற்கமைய அனைத்து பாராளுமன்ற ஒன்றியம்,பொதுநலவாய நாடுகள் அமைப்பு மற்றும் சார்க் அமைப்பு ஆகிய அமைப்புக்களிடம் முறைப்பாடளித்துள்ம்.

பாராளுமன்றத்தின் தற்போதைய செயற்பாடுகள் ஜனநாயக கொள்கைக்கும்,பாராளுமன்ற கௌரவத்திற்கும் விரோதமானதாக உள்ளன.எமது தரப்பினரது உரிமையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உண்டு என்பதால் சர்வதேச நிறுவனங்களை நாடியுள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் திறந்து வைக்கப்பட்டுள்ள புதிய அமெரிக்க...

2022-09-29 17:36:50
news-image

ஆசிரியர் தினத்திற்கு சகோதரன் பணம் செலுத்தாமையால்...

2022-09-29 17:27:36
news-image

அரசியல்வாதிகளின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டமையின் எதிரொலி :...

2022-09-29 16:55:28
news-image

இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் 1.5 மில்லியன்...

2022-09-29 16:29:35
news-image

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக யாழில் பேரணி

2022-09-29 16:11:16
news-image

முகநூல் காதல் ; காதலியின் புதிய...

2022-09-29 16:14:23
news-image

சனத் நிஷாந்தவுக்கு எதிராக குற்ற பகிர்வு...

2022-09-29 15:56:10
news-image

மஹிந்த தலைமையில் நவராத்திரி பூஜை :...

2022-09-29 16:07:37
news-image

நாடு வங்குரோத்து நிலையை அடைந்து விட்டதாக...

2022-09-29 15:04:27
news-image

மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை...

2022-09-29 14:07:25
news-image

இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்து...

2022-09-29 13:06:34
news-image

பாதுகாப்பு பதில் அமைச்சருக்கும் உயர் அதிகாரிகளுக்கும்...

2022-09-29 13:44:47