நீதிமன்றக்கட்டளையை மீறி பௌத்தகட்டுமானங்கள் தொடர்கின்றன : தடுப்புக்காவலில் இருந்தவாறு ரவிகரன், மயூரன் முறைப்பாடு

Published By: Vishnu

22 Sep, 2022 | 12:53 PM
image

விஜயரத்தினம் சரவணன்

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையில் நீதிமன்றால் வளங்கப்பட்ட கட்டளைகளை மீறி அங்கு தொடர்ந்து பௌத்த கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் தடுப்புக்காவலில் உள்ள முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும், முன்னாள் கரைதுறைப்பற்று பலநோக்குக் கூட்டுறவுச்சங்கத் தலைவர் இரத்தினராசா மயூரன் ஆகியோர் பொலிசில் முறைப்பாடுசெய்துள்ளனர்.

குறிப்பாக முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா கடந்த 19.06.2022 அன்று குருந்தூர்மலைக்கு விஜயம்செய்து, இதற்குமேல் அங்கு கட்டுமானப்பணிகள் எதனையும் மேற்கொள்ளக்கூடாது எனக் கட்டளை பிறப்பித்திருந்தார்.

இந் நிலையில் 21.09.2022 நேற்று தாம் அங்கு சென்றபோது அங்கு காட்டுமானப்பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக ரவிகரன் மற்றும், மயூரன் ஆகியோர் முறைப்பாடுசெய்துள்ளனர்.

மேலும் அங்கு கட்டுமானத்திற்குத் தயாரான நிலையில் சிமேந்து கலவைசெய்யப்பட்டிருந்தமை, கட்டுமானப் பணிகள் இடம்பெற்றமைக்கான அடையாளங்கள் அங்கு காணப்பட்டமை, கட்டுமானப் பொருட்கள் மற்றும் கட்டுமானப்பணிக்கான கருவிகள் அங்கு காணப்பட்டமை தொடர்பிலும் இந்தமுறைப்பாட்டில் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33