ரஷ்ய தூதுவரை வெளியேற்றுவது குறித்து ஆராய்கின்றது அவுஸ்திரேலியா

By Rajeeban

22 Sep, 2022 | 01:01 PM
image

உக்ரேனிற்கு எதிராக அணுவாயுத தாக்குதல் நடத்தப்படலாம் என  ரஷ்ய ஜனாதிபதி எச்சரித்துள்ளதை தொடர்ந்து அவுஸ்திரேலியா தனது நாட்டிற்கான  ரஷ்ய தூதுவரை வெளியேற்றுவது குறித்து ஆராய்ந்து வருகின்றது என வெளிவிவகார அமைச்சர் பெனி வொங் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா அச்சத்தை ஏற்படுத்தும் விதத்தில் கருத்துக்களை தெரிவிப்பதை அதிகரித்துள்ளதை தொடர்ந்து உக்ரேனிற்கு மேலதிக இராணுவ உதவியை வழங்குவது குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் எனினும் பாதுகாப்பு மற்றும் விநியோகங்களில் காணப்படும் பிரச்சினைகளால் ஆயுத உதவியை வழங்குவது பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவின் அச்சுறுத்தல் நினைத்துப்பார்க்க முடியாததது பொறுப்பற்றது என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

புட்டின் ரஷ்யாவின் ஆள்புல ஒருமைப்பாட்டை பாதுகாப்பதாக தெரிவிப்பது உண்மையில்லை போலியான சர்வஜன வாக்கெடுப்பு எதுவும் அதனை உண்மையாக்காது என குறிப்பிட்டுள்ள பெனி வொங் சட்டவிரோதமான ஒழுக்கக்கேடான யுத்தத்திற்கு ரஷ்யா மாத்திரமே பொறுப்பு எனவும் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா உடனடியாக உக்ரைனிலிருந்து தனது படைகளை விலக்கிக்கொள்ளவேண்டும். உக்ரேனிற்கு எதிரான தனது சட்டவிரோத  ஒழுக்கநெறியற்ற ஆக்கிரமிப்பை முடிவிற்கு கொண்டுவரவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிட்னியில் ஆபத்தான கரும்பு தேரைகளால் அச்சம்

2022-09-29 14:57:25
news-image

ஆங் சாங் சூகியின் பொருளாதார ஆலோசகரான...

2022-09-29 14:31:59
news-image

உக்ரேனில் கைப்பற்றிய பகுதிகளை இணைக்கிறது ரஷ்யா

2022-09-29 13:08:24
news-image

பாக்கிஸ்தான் பொலிஸார் எதிர்நோக்கும் புதிய நெருக்கடி-...

2022-09-28 16:04:03
news-image

தலைமுடியை வெட்டி ஹிஜாப் போராட்டத்திற்கு ஆதரவு...

2022-09-28 16:02:57
news-image

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு...

2022-09-28 15:11:59
news-image

சவுதி அரேபியாவின் பிரதமராக இளவரசர் முகமது...

2022-09-28 11:17:49
news-image

வீட்டுக் காவல் வதந்திக்கு பிறகு முதன்...

2022-09-28 10:44:04
news-image

ரஷ்யாவில் கொரோனா தொற்று திடீர் அதிகரிப்பு

2022-09-28 09:21:33
news-image

ஜின்ஜியாங்கில் தனது பாரிய மனித உரிமை...

2022-09-27 16:39:59
news-image

இந்தியாவில் தயாராகும் அப்பிள் கைத்தொலைபேசி

2022-09-27 15:29:19
news-image

போரைக் கண்டு அஞ்சும் நாடு அல்ல...

2022-09-27 12:55:09