தமிழர் நிலங்கள் மீதான பேரினவாத ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடியவர்களை கைது செய்தமைக்கு எதிராக முல்லைத்தீவில் போராட்டம்

Published By: Vishnu

22 Sep, 2022 | 12:55 PM
image

கே .குமணன் 

குருந்தூர் மலையை அண்டிய தமிழர் நிலங்கள் தொல்லியல் திணைக்கத்தால் அபகரிப்புக்குள்ளாக்கப்பட்டமையை கண்டித்து 21 ஆம் திகதி புதக்கிழமை முல்லைத்தீவு குருந்தூர் மலை பகுதியில் போராட்டம் மேற்கொண்ட முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் குமுளமுனை கிழக்கு கிராம அபிவிருத்தி சங்க தலைவரும் காணி அபகரிப்புக்கு எதிரான போராட்ட குழுவின் தலைவருமான இரத்தினராசா மயூரன் ஆகியோர் முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமையை கண்டித்தும் நீதிமன்ற உத்தரவை மீறி குருந்தூர் மலையில் நடைபெறும் பௌத்த கட்டுமான நடவடிக்கைக்கு எதிராகவும் கண்டன போராட்டம் ஒன்று இன்று காலை (22) முல்லைத்தீவு நகரில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் மற்றும் மயூரன் ஆகியோரை நேற்று (21) மாலை முல்லைத்தீவு தலைமை பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு அழைத்த பொலிஸார் வாக்கு மூலம் பெற்றபின்னர் கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்த பின்னர் இன்றையதினம் முல்லைத்தீவு நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 

தொல்லியல் திணைக்களத்தினரால் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனை விட மேலதிகமாக நான்குபேரை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதாக அறிய முடிகின்றது.

இந்த நிலையில் தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கபடுவதற்கு எதிராகவும் நீதிமன்ற உத்தரவை மீறி பௌத்த கட்டுமானங்கள் இடம்பெறுவதற்க்கு எதிராகவும் ஜனநாயக வழியில் போராட்டம் மேற்கொண்டவர்களை கைது செய்த பொலிஸாரின் அராஜக செயற்பாட்டை கண்டித்தும் நில ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் இந்த கண்டன போராட்டம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08