அவுஸ்திரேலியாவில் கரையொதுங்கிய திமிங்கலங்கள் ; உயிர்பிழைக்க வைக்க மக்கள் முயற்சி

Published By: Digital Desk 3

22 Sep, 2022 | 12:08 PM
image

அவுஸ்திரேலியாவில் மேக்வாரி துறைமுகத்துக்கு அருகே உள்ள கடற்கரையில் கொத்து, கொத்தாக திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளன.

அவுஸ்திரேலியா நாட்டின் தாஸ்மேனியா தீவில் உள்ள மேக்வாரி துறைமுகத்துக்கு அருகே உள்ள கடற்கரையில் நேற்று 200-க்கும் அதிகமான திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. 

AFP/Department of Natural Resources and Environment-Tasmania

ஒரே நேரத்தில் கொத்து, கொத்தாக திமிங்கலங்கள் கரை ஒதுங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவற்றில் பாதிக்கும் அதிகமான திமிங்கலங்கள் இன்னும் உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது. 

எனவே அவற்றை மீட்டு மீண்டும் கடலுக்குள் விடுவதற்கான முயற்சிகளில் கடற்படையினரும், தன்னார்வலர்களும் ஈடுபட்டுள்ளனர். 

AFP/Department of Natural Resources and Environment-Tasmania

எனினும் திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ள இடம் சிக்கலான பகுதியாக இருப்பதால் மீட்பு குழுக்களால் உடனடியாக அங்கு செல்ல முடியவில்லை என்று கூறப்படுகிறது. 

அதே சமயம் உள்ளூர் மக்கள் கரை ஒதுங்கிய திமிங்கலங்களை போர்வையால் மூடியும், வாளிகளில் தண்ணீர் ஊற்றியும் அவற்றை உயிருடன் வைத்திருப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

Australian Broadcasting Corporation via AP

அவுஸ்திரேலியாவில் திமிங்கலங்கள் கரை ஒதுங்குவது அரிதான விஷயமல்ல. கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இதே தாஸ்மேனியா தீவு கடற்கரையில் 500க்கும் அதிகமான திமிங்கலங்கள் கரைஒதுங்கியுள்ளன. அவற்றில் சுமார் 100 திமிங்கலங்கள் மட்டுமே உயிர்பிழைத்தன.

Australian Broadcasting Corporation via AP

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னிலையில் வீடியோ...

2025-03-15 12:07:55
news-image

பங்களாதேஷில் 8 வயது சிறுமி பாலியல்...

2025-03-14 15:44:10
news-image

பனாமா கால்வாயை முழுமையான கட்டுப்பாட்டின் கீழ்...

2025-03-14 14:33:13
news-image

பாலஸ்தீன மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தி...

2025-03-14 13:56:27
news-image

போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொள்கிறோம் ஆனால்.....

2025-03-14 13:24:45
news-image

புகையிரதத்தின் மீது பிரிவினைவாதிகளின் தாக்குதலிற்கு இந்தியா...

2025-03-14 12:53:23
news-image

டென்வர் விமானநிலையத்தில் அமெரிக்க எயர்லைன்ஸ் விமானத்தில்...

2025-03-14 10:20:32
news-image

பாக்கிஸ்தானில் பணயக்கைதிகளாக பிடிபட்ட புகையிரத பயணிகளைமீட்கும்...

2025-03-13 14:40:20
news-image

போதைப்பொருளிற்கு எதிரான போரின் போது கொலைகள்...

2025-03-13 13:03:48
news-image

உக்ரைனுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு ரஸ்யா நிபந்தனைகளை...

2025-03-13 10:17:40
news-image

''ஆர்பிஜியொன்று புகையிரதத்தின் இயந்திரத்தை தாக்கியது அதன்...

2025-03-12 17:32:53
news-image

கொரியாவில் நெருக்கடி : ஆசியாவுக்கான ஜனநாயக...

2025-03-12 21:07:58