600 மெட்ரிக் தொன் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை நன்கொடையாக வழங்கும் அவுஸ்திரேலியா

Published By: Digital Desk 3

22 Sep, 2022 | 11:08 AM
image

(எம்.மனோசித்ரா)

அவுஸ்திரேலியாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ள 15 மில்லியன் டொலர் பெறுமதியான அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உதவி பொருட்களின் முதற்கட்டம் நேற்று புதன்கிழமை நாட்டை வந்தடைந்துள்ளது. 

பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு வெகுவிரைவில் இவை பகிர்ந்தளிக்கப்படும் என்று அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

அத்தோடு 600 மெட்ரிக் தொன் அரிசி உள்ளடங்களாக, பருப்பு வகைகள் மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவையும் வெகு விரைவில் நாட்டிற்கு வரவுள்ளதாகவும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. உலக உணவு திட்டத்துடன் இணைந்து இலங்கைக்கு இந்த நன்கொடை வழங்கப்படுகிறது.

'அவுஸ்திரேலியாவும் இலங்கையும் பல தசாப்தகாலமாக நட்புறவைப் பேணி வருகின்றன. அந்த வகையில் முன்னொருபோதும் இல்லாதவாறு இலங்கை இவ்வாறானதொரு நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறு உதவிகளை வழங்குவதானது இரு நாடுகளுக்குமிடையிலான நல்லெண்ணத்தின் விரிவாக்கமாகும்.' என்று இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

பொருட்களின் விலை உயர்வுகள், தொழில்களை இழத்தல் மற்றும் வருமானம் குறைவடைதல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு உயிர் காக்கும் உணவை வழங்க உலக உணவு திட்டத்துடன் இணைந்து நாம் நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

'உலக உணவு திட்டத்தின் அவசரகால நடவடிக்கைக்கு முதலில் பங்களித்தது அவுஸ்திரேலியாவாகும். இது தற்போதைய நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க எமக்கும் உதவியது' என்று உலக உணவு திட்டத்தின் இலங்கைப் பிரதிநிதியும் நாட்டுப் பணிப்பாளருமான அப்துர் ரஹீம் சித்திக் குறிப்பிட்டுள்ளார்.

'அவுஸ்திரேலியாவின் நன்கொடையின் மூலம், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் பெண்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் உட்பட மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு நாம் நிதி மற்றும் உணவு என்பவற்றை வழங்குகிறோம்.' என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியானது உணவுப் பாதுகாப்பின்மையை அதிகரித்துள்ளது மற்றும் சமீபத்திய உலக உணவு திட்டத்தின் ஆய்வுகள் அவசர உதவியின்றி எதிர்வரும் மாதங்களில் நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்பதைக் காட்டுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31