நத்தைச் சூரியின் மருத்துவ பயன்கள்

By Sindu

22 Sep, 2022 | 11:16 AM
image

நத்தைச் சூரி பட்டையான தண்டுகளையும் மிகச்சிறிய பூக்களையும் கொண்டி செடியினம். இதன் வேர் மற்றும் விதை மருத்துவ பயனுடையது. இதற்கு தருணி, குழி மீட்டான் என வேறு பெயர்களும் உண்டு.

நத்தைச் சூரி வேரை 10 கிராம் அளவு எடுத்து அரைத்து பசும்பாலில் கலந்து வடிக்கட்டி காலை,மாலை தினமும் குடித்து வர தாய்ப்பால் பெருகும்.

இதன் வேரை 20 கிராம் அளவு எடுத்து 200 மில்லி அளவு தண்ணீரில் போட்டு இரண்டு மணி நேரத்துக்கு ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு அதை வடிகட்டி 50மில்லி அளவு தினமும் 3 வேளை குடித்து வர உடலில் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும். உடல் உறுதி பெறும்.

இதன் விதையை பொன் வறுவலாக வறுத்து பொடியாக்கி நீரில் போட்டு கொதிக்க வைத்து சுண்ட காய்ச்சி அதில் பசும்பால், கற்கண்டு கலந்து தினமும் காலை, மாலை குடித்து வர கல்லடைப்பு நீங்கும். உடல் சூடு தணியும். சுதையடைப்பு குணமாகும்.

இதன் விதை பொடியுடன் சம அளவு கற்கண்டு சேர்த்து 5 கிராம் அளவு தினமும் 3 வேளை சாப்பிட்டு வர வயிற்றுப்போக்கு குணமாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right