அதிகளவான எப்லடொக்சின் அடங்கிய சமபோஷ, யஹபோஷ, லக்போஷ : நான்கு நிறுவனங்களின் பணிப்பாளர்களை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல்

Published By: Digital Desk 3

22 Sep, 2022 | 02:46 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற,  பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாக எப்லடொக்சினை உள்ளடக்கிய சமபோஷ, யஹபோஷ, லக்போஷவை   உற்பத்தி செய்து விநியோகித்தமையை மையப்படுத்தி  நான்கு முன்னணி நிறுவனங்கள் மற்றும் அதன் பணிப்பாளர்களுக்கு நீதிமன்றில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் நேற்று ( 21) உத்தரவிட்டது.  

கொழும்பு மேலதிக நீதிவான் மஞ்சுள திலகரத்ன இதற்கான உத்தரவை பிறப்பித்ததுடன் எதிர்வரும் நவம்பர் 18 ஆம் திகதி மன்றில் ஆஜராக வேண்டும் என இதன் போது அறிவித்தல் அனுப்பினார்.

குறித்த நான்கு நிறுவனங்கள் மற்றும் அதன் பணிப்பாளர்கள் உற்பத்தி செய்து விநியோகித்த 'போஷ' ரக உணவில், பரிந்துரைக்கப்பட்ட அளவை விட எப்லடொக்சின்  அடங்கியுள்ளதாக இரசாயன பகுப்பாய்வு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது என, கொத்தட்டுவ பொது சுகாதார பரிசோதகர்  பி.ஏ.எஸ். கசுன் நீதிமன்றில் முறைப்பாடுகளை தாக்கல்ச் செய்துள்ளார்.

அதனை ஆராய்ந்தே நீதிவான் இந்த அழைப்பானையை அனுப்பினார்.

3 வயது வரையிலான பிள்ளைகளுக்கு எந்த வகையிலும் பொருந்தாத,  பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாக எப்லடொக்சினை கொண்டிருக்கும்,  தரமற்ற சமபோஷ, யஹபோஷ மற்றும் லக்போஷவை உற்பத்தி செய்து  விநியோகித்தமை தொடர்பாக 1991 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க உணவுத் திருத்தச் சட்டத்தின் கீழ், கொத்தட்டுவ பொது சுகாதார பரிசோதகர் பணிமனை, 4 முன்னணி நிறுவனங்கள் மற்றும் அதன் பணிப்பாளர்களுக்கு எதிராக  4 வழக்குகளை தாக்கல் செய்துள்ளது.

சிலோன் பிஸ்கட் நிறுவனத்தின் கிளை நிறுவனமான பிளன்டி பூட் நிறுவனம்,  மெலிபன் டேரி அக்ரோ தனியார் நிறுவனம், மெலிபன் மில்க் ப்ரொடெக்ட்ஸ் நிறுவனம்,  லக்மீ  எக்ஸ்போர்ட் லங்கா நிறுவனம்  ஆகிய நான்கு நிறுவனங்கள், அதன் பணிப்பாளர்களுக்கு எதிராகவே இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ட்ரம்ப் மீதான படுகொலை முயற்சி தொடர்பில்...

2024-07-14 11:57:50
news-image

தேசிய மக்கள் சக்திக்கு சிறுபான்மையினரின் ஆதரவு...

2024-07-14 11:59:28
news-image

ஜனாதிபதி வேட்பாளர்களோடு நிபந்தனைகளுடன் பேசுங்கள் -...

2024-07-14 12:24:26
news-image

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளுடன் கட்டுநாயக்கவில் பெண்...

2024-07-14 11:06:04
news-image

இலங்கை தொடர்பான பயண வழிகாட்டலைத் தளர்த்துமா...

2024-07-14 10:02:13
news-image

விளக்கேற்றி பூஜை செய்து புதையல் தோண்ட...

2024-07-14 10:39:29
news-image

காத்தான்குடி - புதுக்குடியிருப்பில் எரிபொருள் பவுசர்...

2024-07-14 10:06:21
news-image

பொருளாதார, பாதுகாப்பு துறைசார் ஒத்துழைப்பை கட்டியெழுப்புதல்...

2024-07-14 09:57:02
news-image

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணி - இரண்டு...

2024-07-14 09:36:19
news-image

நாட்டின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் 

2024-07-14 09:22:44
news-image

தமிழ்த் தேசியப் பேரவையின் உடன்பாடு 17இல்...

2024-07-14 09:29:39
news-image

ஜனாதிபதி தேர்தல் 2024 : செவ்வாய்க்கிழமை...

2024-07-14 10:10:40