(எம்.எப்.எம்.பஸீர்)
ஓமான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணிப் பென்களாக பெண்களை அழைத்து சென்று, விபச்சாரம் உள்ளிட்ட சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் கும்பலை கண்டறிந்து சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க 18 நாடுகளுக்கு விசாரணை குழுக்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில் பாதுகாப்பு அமைச்சின் நேரடி கட்டுப்பாட்டில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் தகவல்கள் வெளிப்படுத்தின.
பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்படும் தேசிய மனிதக் கடத்தல் தடுப்பு செயலணி (National Anti Human Trafficking Task Force) ஊடாக இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த சட்ட விரோத செயற்பாட்டுடன் தொடர்புடைய முகவர் நிறுவனங்கள், தூதரக அதிகாரிகள், குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியக அதிகாரிகளை அடையாளம் கண்டு அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்காக இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
ஓமான் பாதுகாப்பு இல்லமொன்றில் இவ்வாறு விபச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டமையால் பாதிக்கப்பட்ட 41 பேர் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 9 பேர் இந்த நடவடிக்கையால் சுய நினைவை இழந்துள்ளதாக கூறப்படுகின்ரது. இந் நிலையில் முதலில் ஓமானுக்கு செல்லவுள்ள விசாரணைக் குழு அங்கு பாதிக்கப்பட்டவர்களிடம் வாக்குப் மூலம் பெற்று, சந்தேக நபர்களை அடையாளம் காணும் ஆரம்ப நடவடிக்கைகளை முனென்டுக்கவுள்ள நிலையில், ஏனைய 17 நாடுகளுக்கும் 17 குழுக்கள் அனுப்பட்டு தகவல்கள் சேகரிக்கப்படவுள்ளதாக அறிய முடிகிறது.
தேசிய மனிதக் கடத்தல் தடுப்பு செயலணி உருவாக்கப்பட்டதிலிருந்து இவ்வாறான விசாரணை ஒன்றினை முன்னெடுக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM