bestweb

அதிகளவான எப்ளடொக்ஷின் அடங்கிய சமபோஷ, உள்ளிட்ட 4 நிறுவங்களின் பணிப்பாளர்களை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல்

Published By: Digital Desk 4

21 Sep, 2022 | 10:39 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற,  பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாக எப்ளடொக்ஷினை உள்ளடக்கிய சமபோஷ, யஹபோஷ, லக்போஷவை   பிள்ளைகள்  தொடர்பில் உற்பத்தி செய்து விநியோகித்தமையை மையப்படுத்தி  நான்கு முன்னணி நிறுவனங்கள் மற்றும் அதன் பணிப்பாளர்களுக்கு நீதிமன்றில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று ( 21) உத்தரவிட்டது.  

கொழும்பு மேலதிக நீதிவான் மஞ்சுள திளகரத்ன இதற்கான உத்தரவை பிறப்பித்ததுடன் எதிர்வரும் நவம்பர் 18 ஆம் திகதி மன்றில் ஆஜராக வேண்டும் என இதன் போது அறிவித்தல் அனுப்பினார்.

 குறித்த நான்கு நிறுவனங்கள் மற்றும் அதன் பணிப்பாளர்கள் உற்பத்தி செய்து விநியோகித்த ' போஷ ' ரக உணவில், பரிந்துரைக்கப்பட்ட அலவை விட எப்ளடொக்ஷின்  அடங்கியுள்ளதாக இரசாயன பகுப்பாய்வு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது என, கொத்தட்டுவ பொது சுகாதார பரிசோதகர்  பி.ஏ.எஸ். கசுன் நீதிமன்றில் முறைப்பாடுகளை தாக்கல் செய்துள்ளார்.

 அதனை ஆராய்ந்தே நீதிவான் இந்த அழைப்பானையை அனுப்பினார்.

3 வயது வரையிலான பிள்ளைகளுக்கு எந்த வகையிலும் பொருந்தாத,  பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாக எல்படொக்ஷினை கொண்டிருக்கும்,  தரமற்ற சமபோஷ, யஹபோஷ மற்றும் லக்போஷவை உற்பத்தி செய்து   விநியோகித்தமை தொடர்பாக 1991 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க உணவுத் திருத்தச் சட்டத்தின் கீழ், கொத்தட்டுவ பொது சுகாதார பரிசோதகர் பணிமனை, 4 முன்னணி நிறுவங்கள் மற்றும் அதன் பணிப்பாளர்களுக்கு எதிராக  4 வழக்குகளை தாக்கல் செய்துள்ளது.

சிலோன் பிஸ்கட் நிறுவனத்தின் கிளை நிறுவனமான பிளன்டி பூட் நிறுவனம்,  மெலிபன் டேரி அக்ரோ தனியார் நிறுவனம், மெலிபன் மில்க் ப்ரொடெக்ட்ஸ் நிறுவனம்,  லக்மீ  எக்ஸ்போர்ட் லங்கா நிறுவனம்  ஆகிய நான்கு நிறுவனங்கள், அதன் பணிப்பாளர்களுக்கு எதிராகவே இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

20 கோடி ரூபாய் பெறுமதியான அதிநவீன...

2025-07-14 03:05:35
news-image

கம்பஹா பல்லெவே பகுதியில் பஸ் மோட்டார்...

2025-07-14 02:58:28
news-image

ஐஸ் போதைப்பொருள் மற்றும் பணத்துடன் இருவர்...

2025-07-14 01:57:38
news-image

மிகக் குறுகிய காலத்தில் வட மாகாணத்தின் ...

2025-07-14 01:54:11
news-image

டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை இந்தியாவுக்கு...

2025-07-13 17:12:59
news-image

தெமட்டகொடா குப்பை மேட்டுப்பகுதியில் தீ

2025-07-13 22:37:34
news-image

தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ்...

2025-07-13 20:18:54
news-image

குண்டுத்தாக்குதல்கள் பற்றி பிள்ளையான் ஏதும் குறிப்பிடவில்லை...

2025-07-13 17:12:09
news-image

நித்தகைக்குளம் சீரமைப்புவேலைகளை பார்வையிட்டார் எம்.பி. ரவிகரன்

2025-07-13 21:48:58
news-image

யாழில். போலி அனுமதி பத்திரங்களுடன் மணல்...

2025-07-13 21:20:29
news-image

நாளை முதல் எதிர்வரும் 18 வரை...

2025-07-13 20:10:28
news-image

பிரதமர் தலைமையில் 2026 புதிய கல்விச்...

2025-07-13 20:29:32