(எம்.மனோசித்ரா)
அரசாங்கத்தின் அடக்குமுறைகள் தற்போது பாராளுமன்றத்தினுள்ளும் தொடர்கின்றன. பாராளுமன்ற ஜனநாயகத்தை முழுமையாக சீரழிக்கும் வகையில் கருத்து சுதந்திரம் பறிக்கப்படுகிறது. இது தொடர்பில் பொதுநலவாய பாராளுமன்ற சங்கம், சர்வதேச பாராளுமன்ற சங்கம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களுக்கு எழுத்து மூலம் தெரியப்படுத்தவுள்ளதாக பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
பாராளுமன்ற விவாதத்தின் போது தான் உட்பட சுயாதீனமாக செயற்படும் 13 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தமது கருத்துக்களை தெரிவிப்பதற்கு உரியவாறு நேரம் ஒதுக்கிக் கொடுக்கப்படாமை தொடர்பில் குறிப்பிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள அடக்குமுறைகள் நாட்டினுள் மாத்திரமின்றி , பாராளுமன்றத்தினுள்ளும் தொடர்கின்றன.
13 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தமது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான உரிமை இன்று வழங்கப்படவில்லை. நாட்டுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விவாதம் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் , இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வாய்ப்புக்கள் மறுக்கப்படுகின்றன.
தேசிய வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்கான வழிமுறை தொடர்பிலேயே இந்த விவாதம் முன்னெடுக்கப்பட்டது. இது தொடர்பில் தெரிவிப்பதற்கு எமது பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பல முக்கிய விடயங்கள் காணப்பட்டன.
இந்த விடயங்களை தெரிவிப்பதற்கான உரிமை எமக்கு மறுக்கப்பட்டுள்ளது. அந்தளவிற்கு எமக்கு பயமா? பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளுக்கு அப்பால் , கருத்து தெரிவிப்பதற்கான அடிப்படை உரிமை இங்கு மீறப்படுகிறது.
இது பாராளுமன்ற ஜனநாயகத்தை முழுமையாக சீரழிக்கும் செயற்பாடாகும். இது தொடர்பில் உள்நாட்டிலும் , சர்வதேசத்தின் மத்தியிலும் பகிரங்கமாக வெளிப்படுத்துவோம். பொதுநலவாய பாராளுமன்ற சங்கம் , சர்வதேச பாராளுமன்ற சங்கம் மற்றும் சார்க் வலய நாடுகள் அமைப்பு என்பவற்றிடமும் இது தொடர்பில் எழுத்து மூலம் , தெரியப்படுத்துவோம்.
மக்களின் அடிப்படை உரிமைகள் இது தாக்கம் செலுத்தும் விதம் தொடர்பில் தெளிவுபடுத்தவுள்ளோம். ஒருபுறம் அரசாங்கத்துடன் இணைந்து அனைவரும் ஒற்றுமையுடன் செயற்படுவோம் என்று கூறப்படும் அதே வேளை, மறுபுறம் எமக்கு பாராளுமன்றத்தில் கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு கூட வாய்ப்புக்கள் வழங்கப்படுவதில்லை என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM