மன்னார் இல்மனைற்று மண்ணகழ்வை உடன் நிறுத்துங்கள் ; இலங்கை சுற்றுச்சூழல் மையம் மற்றும் மன்னார் மக்கள் பிரதம குழு கூட்டாக வலியுறுத்து

By Vishnu

21 Sep, 2022 | 11:09 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

மன்னாரில் இல்மனைற்று மண்ணகழ்விற்கு  அவுஸ்திரேலியாவின் தனியார் நிறுவனமொன்றுக்கு அனுமதி வழங்கப்பட்டு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.  மேலும் அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் இல்மனைற்றுக்கான மண்ணகழ்வு நடைமுறைப்படுத்தபடுமாயின் அதுவே மன்னார் மக்களினதும் அவர்களது வாழ்வாதாரத்தினதும், சூழலினதும் முடிவுக்கு வழி வகுக்கும் என்று இலங்கை சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் மற்றும் மன்னார் மக்கள் பிரதம குழு கூட்டாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் மற்றும், மன்னார் மக்கள் பிரதம குழு ஒன்றினைந்து 21 ஆம் திகதி புதன்கிழமை கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவித்த சுற்றுச்சூழல் நீதிக்கான மையத்தின் நிர்வாக இயக்குனர் ஹேமந்த விதானகே கூறுகையில்,

TSL  (டைட்டானியம் சன்ஸ் லிமிடெட்) எனும் அவுஸ்திரேலிய நிறுவனம் மற்றும் அவர்களின் இலங்கையில் உள்ள பங்குதாரர்கள் ஒன்றிணைந்து மன்னார் பகுதிகளில் உள்ள 200 km  பரப்பிலான பகுதியில் சுமார் 50 வருடங்களுக்கு மண்ணகழ்விற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

 மன்னார் தீவானது கடல் மட்டத்திற்கு கீழே காணப்படுவதால் இத்திட்டம் நடைமுறைப்படுத்தபடுமாயின் கடல் நீர் உட்புகுந்து மக்கள் வாழ்வதற்கு முடியாது போகும். மன்னார் தீவின் மொத்த பரப்பளவில் 62 வீதமான பகுதியில் மண்ணகழ்வை மேற்கொள்ள அவுஸ்திரேலிய நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அதேபோல் மன்னாரின்  50 வீதமான பகுதிகளில் இல்மனைற்று மண்ணகழ்வை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தலைமன்னார், பேசாலை, கரிசல், நடுக்குடா மற்றும் தாழ்வுபாடு உட்பட 20 இற்கும் மேற்பட்ட கிராமங்களை இல்லாமல் போகும்.

இருப்பினும் இத்திட்டத்தை ஆராய்வதற்காக கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் தனியார் காணிகளில் சுமார் 4,000 மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் காணி உரிமையாளர்களுக்கு தெரியாத வகையில் இடப்பட்டு மண்மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.

இதற்கமைவாக தொடர்ச்சியாக மண்ணகழ்வு நடைபெறுமாயின் கடல் நிலத்தடி நீருக்குள் உட்புகுந்து நீர்  நாசமடையும், உள்ளூர் மக்கள் எதிர்கால சந்ததியின் வாழ்வாதாரத்தை பாதிக்கும். அத்துடன் மீன்பிடி கால்நடை, பனை மற்றும் தென்னை வளம் போன்றவை அழிவடையும். குறிப்பாக மன்னார் வாழும் 2/3 வீதமான மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்.

அரசாங்கத்தினால் அபிவிருத்தி எனும் போர்வையில்  வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக கூறி தற்போது இவ்வாறான சட்டவிரோதமாக மண்ணகழ்வு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகிறது.

மேலும் இது தொடர்பாக  அதிகாரிகள் மற்றும் பொலிஸாரிடம் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட போதிலும்  உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை.

 இந்நிலையில், கை மீறி போகும் முன் மன்னார் தீவை பாதுகாப்பதற்கு குறித் வேலைத்திட்டத்தை உடன் நிறுத்துமாறும்  ஜனாதிபதி உட்பட உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும்  கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மட்டு கரடியனாற்றில் 16 மாடுகள் கடத்தல்...

2023-01-28 12:13:02
news-image

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள வசந்த...

2023-01-28 12:06:00
news-image

தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தி சுதந்திரதினத்தன்று யாழிலிருந்து...

2023-01-28 11:38:21
news-image

3 இந்திய மீன்பிடிப் படகுகள் அரசுடமையாக்கப்பட்டன

2023-01-28 11:21:37
news-image

வாழைச்சேனையில் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக கண்டன...

2023-01-28 11:38:57
news-image

பாதுகாப்பு, செழிப்பினை தொடர்ந்தும் முன்னேற்ற நாங்கள்...

2023-01-28 11:07:07
news-image

மீற்றர் வட்டி விவகாரம் ; மேலும்...

2023-01-28 11:00:53
news-image

தேர்தல் முடியும்வரை புதிய ஆணைக்குழு அமைப்பதை...

2023-01-28 10:49:46
news-image

சகோதரனுக்காக நாட்டின் அரசியலமைப்பை மாற்றிய உலகில்...

2023-01-28 10:55:50
news-image

இக்கட்டான நிலைமையில் ஒத்துழைப்பு வழங்கிய இந்திய...

2023-01-28 10:26:02
news-image

யாழில் மூன்று தேர்தல் வன்முறைச் சம்பவங்கள்...

2023-01-28 09:49:28
news-image

ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது தேர்தல்...

2023-01-28 09:41:35