(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)
அரசாங்கத்தின் வரி அதிகரிப்பு நடவடிக்கைகள் சாதாரண மக்களைப்பாதித்து விடக்கூடாது. கோடிக்கணக்கில் வருமானம் பெறுபவர்களுக்கும் சாதாரண மக்களுக்கும் ஒரே விதத்தில் வரி அறவிடப்படுவது நியாயம் இல்லை என எதிர்க்கட்சி உறுப்பினர் வேலுசாமி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற அரச வருமானம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
வரி அதிகரிப்பு காரணமாக நாட்டில் 80 வீதமான மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
நாட்டில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கும் வறுமை ஒழிப்பு போன்ற நடவடிக்கைகளுக்கும் வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும்.
வரவு செலவுத் திட்டத்தில் குறைநிரப்பு பெருமளவில் இடம்பெறுவது நாம் வெளிநாடுகளில் கடன் பெற வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்துகிறது. அதுவே இந்த நாட்டின் துரதிஷ்டமான நிலை.
உலகில் நான்காவது வறுமை நாடாக இலங்கை கணிக்கப்பட்டுள்ளது. நாம் இதனை ஒருபோதும் எதிர்பார்த்திருக்கவில்லை. இந்த நிலையில் வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டால் சாதாரண மக்களே பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
நாட்டில் அரச பெருந்தோட்ட நிறுவனங்கள் பல நட்டத்தில் இயங்குகின்றன. அதுவும் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணமாகும். எவ்வாறெனினும் அரசாங்கத்தின் வரி அதிகரிப்பு நடவடிக்கைகள் சாதாரண மக்களைப்பாதித்து விடக்கூடாது. கோடிக்கணக்கில் வருமானம் பெறுபவர்களுக்கும் சாதாரண மக்களுக்கும் ஒரே விதத்தில் வரி அறவிடப்படுவது எவ்வாறு நியாயமாகும்.
தோட்டத் தொழிலாளர்களின் ஒரு நாள் சம்பளம் ஆயிரம் ரூபாவாக உள்ள நிலையில் கோதுமை மா ஒரு கிலோ 400 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது. இதுபோன்ற நடவடிக்கைகளில் சமூக நீதி கடைப்பிடிக்கப் படுவது அவசியமாகும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM