கஞ்சா சட்டவிரோதம் இல்லை என்றால் பாராளுமன்ற வளாகத்தில் பயிரிடுங்கள் - ஹர்ஷ டி சில்வா டயனாவுக்கு பதில்

Published By: Digital Desk 4

21 Sep, 2022 | 11:17 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)

நாட்டில் கஞ்சா சட்டவிரோதமற்றது என்று சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் கூறுவராக இருந்தால், பாராளுமன்றத்திற்கு அருகில் காணப்படும் வெற்றுக் காணிகளிலும் அதனை வளர்க்கலாமே என்று எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற அரச வருமானத்தை அதிகரிக்கும் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தனது உரையின்போது, கஞ்சா வளர்ப்பதற்கு அனுமதி கேட்கத்தேவையில்லை. அது சட்டவிரோதமான செயல் அல்ல என தெரிவித்து, எதிர்க்கட்சியை பார்த்து விமர்சன ரீதியில் கருத்து தெரிவித்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே ஹர்ஷடி சில்வா இவ்வாறு தெரிவித்தார்.

அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் எண்ணங்களுடனான மாற்றங்களுடன் நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் கஞ்சாவை ஏற்றுமதி செய்து நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் இல்லை.

அத்துடன் அவர் கஞ்சா சட்டவிரோதமற்றது என்று கூறியுள்ளார். அப்படியென்றால் அதனை வளர்க்க முடியும்தானே. பாராளுமன்ற அருகிலும் வெற்றிடங்களில் வளர்க்கலாம். இங்கே அருகில் ஒரு ஏக்கர் காணி உள்ளது. அதில் ஏற்றுமதிக்காக கஞ்சா செய்கையை செய்யுங்கள். அதனை செய்யாது எதற்கு எங்களை ஏசுகின்றீர்கள் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02