(இராஜதுரை ஹஷான்இஎம்.ஆர்.எம்.வசீம்)
பொருளாதார மீட்சிக்கான தீர்மானங்கள் மிகவும் வேதனைக்குரியவை.வரி அதிகரிப்பானது மக்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தும்.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண நாட்டு மக்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என குறிப்பிடும் அரச தலைவர் முதலில் சிறந்த எடுத்துக்காட்டாக செயற்பட வேண்டும். ஆனால் நெருக்கடி நிலையிலும் அரசாங்கம் பொறுப்பற்ற வகையிலேயே செயற்படுகிறது என பிவிதுறு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
பாராளுமன்றில் புதன்கிழமை (21) இடம்பெற்ற அரச வருவாய் அதிகரிப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
பொருளாதார நெருக்கடி தீவிரமடையும். எனவே நாட்டு மக்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என அரச தலைவர்கள் நாட்டு மக்களுக்கு உபதேசம் வழங்க முன்னர் அவர்கள் நாட்டு மக்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக செயற்பட வேண்டும்.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண மக்களின் ஒத்துழைப்பு அத்தியாவசியமானது. மக்களாதரவு இல்லாமல் எப்பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது.
பொருளாதார நெருக்கடிக்கு அரச தலைவர் உட்பட அரசாங்கம் தீர்வு காணும் என மக்கள் முதலில் நம்பிக்கை கொள்ள வேண்டும். இவ்விடயத்தில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை சிறந்த எடுத்துக்காட்டாகக் கொள்ள வேண்டும்.
1972 ஆம் ஆண்டு இந்தியா பொருளாதார ரீதியில் மோசமான நெருக்கடியை எதிர்கொண்ட போது அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அரசியல்வாதிகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக செயற்பட்டார்.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வரை , தான் இரவு உணவை உட்கொள்ளபோவதில்லை என அவர் பகிரங்மாக அறிவித்தார்.
அரச தலைவர்களுடன் இடம்பெற்ற ஒரு மாநாட்டை தொடர்ந்து இரவு இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போது இந்திரா காந்தி ஒரு கிளாஸ் நீரை மாத்திரம் அருந்தியுள்ளார்.
அப்போதைய இலங்கை பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க இந்திரா காந்தியிடம் 'நீங்கள் இரவு வேளை புறக்கணிப்பதால் இந்தியாவின் பலகோடி மக்களின் பசியை எவ்வாறு போக்குவது'என வினவியுள்ளார்.
அவரை நோக்கி இந்திய பிரதமர் இந்திரா காந்தி 'நான் பசியுடன் இருப்பதால், பசியுடன் உள்ள அனைவருக்கும் உணவு கிடைக்காது என்பது உண்மை.
ஆனால் நானும் பசியுடன் உள்ளேன் என பசியில் இருப்பவர்கள் அறிந்துக் கொண்டால் அவர்களுக்கு என்மீது நம்பிக்கை வரும்.
அத்துடன் பசியின் கொடுமையை நானும் உணர்வதால் பொருளாதார நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காண்பேன் என மக்கள் என்மீது நம்பிக்கை கொள்வார்கள். பிரச்சினைக்கு தீர்வு காண மக்களின் நம்பிக்கை முக்கியமானது'குறிப்பிட்டார்.
எனவே எமது நாட்டு அரச தலைவர்களும் இந்திரா காந்தியை சிறந்த எடுத்துக்காட்டாக கொள்ள வேண்டும். மக்களின் நம்பிக்கையை வெற்றிக்கொள்ள அரச தலைவர்கள் இந்திரா காந்தியை சிறந்த எடுத்துக்காட்டாக கொள்ளவில்லை. பொருளாதார நெருக்கடி தீவிரமைந்துள்ளது.
எனவே மக்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என குறிப்பிடும் பின்னணியில் அமைச்சரவை அமைச்சுக்களும், இராஜாங்க அமைச்சுக்களும் விஸ்தரிக்கப்பட்டுள்ளன. அரச செலவினங்கள் மட்டுப்படுத்தப்படவில்லை.இவ்வாறு பொறுப்பற்ற வகையில் செயற்பட்டால் நாட்டு மக்கள் எவ்வாறு ஆதரவு வழங்குவார்கள்.
பொருளாதார மீட்சிக்கான தீர்மானங்கள் மிகவும் வேதனைக்குரியது என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமாயின் வரி அதிகரிக்க வேண்டும்.
வரியை அதிகரித்தால் மக்கள் போராட்டம் தீவிரமடையும். அரச தலைவரும் அரசாங்கமும் நாட்டு மக்களின் அபிலாசைக்கு அமைய செயற்பட்டால் அனைத்து நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு நாட்டு மக்கள் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவார்கள் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM