(ஆர்.வி.கே.)
யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு காங்கேசன்துறை பகுதியில் குமாரகோவில் காணப்பட்ட இடத்தில் பௌத்த விகாரை அமைக்கப்பட்டுள்ளமை குறித்து அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் பௌத்த மக்களோ அல்லது படையினரோ வசிக்காத நிலையில் விகாரை அமைக்க வேண்டியதன் அவசியம் என்னவென்றும் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
வலிகாமம் வடக்கில் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த காங்கேசன்துறை மத்திய கிராமம் கடந்த 2015 ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்திற்காக மக்களிடம் கையளிக்கப்பட்டது.

இதன்போது 'குமாரகோவில்' அமைந்திருந்த நிலத்தில் அரச மரம் ஒன்றின் கீழ் சிறிய புத்தர் சிலை வைக்கப்பட்டு படையினரா ல் வணங்கப்பட்ட நிலையில் காணப்பட்டதாகவும் படையினர் உயர்பாதுகாப்பு வலயத்தை பின்நகர்த்தியபோது பௌத்த விகாரை கைவிடப்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

'குமாரகோவில்' சிதைந்த நிலையில் பராமரிப்பின்றி காணப்பட்டதாக கூறும் அப்பகுதி மக்கள், கோவிலுக்கு முன்பாகவே தற்போது விகாரை அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. 'கமுணு' விகாரை என்ற பெ யரில் அமைக்கப்பட்டுள்ள விகாரைக்குள் குமாரகோவில் பிள்ளையார் சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன.

காங்கேசன்துறை பகுதி வரலாற்று சிறப்புமிக்க நகுலேஸ்வரம் மற்றும் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் உள்ளிட்ட பல சிறப்பு மிக்க வைச ஆலயங்களை கொண்ட புண்ணிய பூமியாக விளங்கும் நிலையில் பௌத்த விகாரை ஒன்றை அமைத்தமை திட்டமிட்ட பௌத்த மயமாக்கலின் ஒரு அங்கமா? எனவும் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM