சர்வதேச விளையாட்டு அரங்கில் பிரகாசிக்கும் இராணுவ வீர, வீராங்கனைகள்

By T. Saranya

21 Sep, 2022 | 03:30 PM
image

சர்வதேச விளையாட்டு அரங்கில் பிரகாசித்து, எமது தாய் நாட்டை பெருமைப்படுத்திய இராணுவ விளையாட்டு நட்சத்திர வீர வீராங்கனைகள்  ஸ்ரீ ஜயவர்தனபுர  இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகேவினால் நேற்று (20) கௌரவிக்கப்பட்டனர்.

இந்த விளையாட்டு நட்சத்திரங்கள், கிரிக்கெட், வலைப்பந்து மற்றும் உடற்கட்டமைப்பு  ஆகிய சர்வதேச விளையாட்டுகளில் எமது தாய்நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி  அளப்பெரிய பங்களிப்பை  வழங்கியுள்ளனர்.

இராணுவ கிரிக்கெட் அணியில் இருந்து சார்ஜன்  மகேஷ் தீக்ஷன இலங்கை கிரிக்கெட் அணியின் சிறந்த வீரராக தனது திறமையினை வெளிப்படுத்தியுள்ளார். இவர் 2022 செப்டம்பர் 07 ஆம் திகதி ஆர் பிரேமதாச விளையாட்டரங்கில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 04 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் அவர் சர்வதேச டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டுகளுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இப்போது இலங்கை கிரிக்கெட் சுழற்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் சிறந்த வீரராக உள்ளார். இலங்கைக்கு எதிரான 2022 ஆசிய கோப்பை வெற்றியில் திறமையான வீரராக இருந்த அவர், இப்போது உலக டி20 பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் 8 வது இடத்தில் உள்ளார். அவரது அர்ப்பணிப்பைப் பாராட்டிய இராணுவம், இராணுவத் தளபதியின் ஆசீர்வாதத்துடன் அவரை சாதாரண சிப்பாயில் இருந்து சார்ஜன் நிலைக்கு உயர்த்தியது.

சில வாரங்களுக்கு முன்னர் ஆசிய வலைப்பந்து சாம்பியன்ஷிப் 2022 கிரீடத்தைப் பெறுவதற்கு பங்களித்த வலைப்பந்து வீராங்கனைகளான கோப்ரல் பாஷினி டி சில்வா, கோப்ரல் திசல அல்கம மற்றும் கோப்ரல் இதுஷா ஜனனி  ஆகியோருக்கும்  அவர்களின் தைரியம் மற்றும் அர்ப்பணிப்பிக்கு இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் அவர்கள் சாதாராண சிப்பாயிலிருந்து கோப்ரல் நிலைக்கு  உயர்த்தப்பட்டனர். 

திசல அல்கம மற்றும் பாஷினி டி சில்வா இந்த ஆண்டு போலவே 2015 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை வென்ற வலைப்பந்து அணியில் இருந்தனர்.

இதேபோல், இராணுவ தளபதியுடனான இந்த சிறப்பு சந்திப்பில் செப்டம்பர் 2 - 5 திகதிகளில் கிர்கிஸ்தானின் பிஷ்கெக்கில் நடைபெற்ற 2022 ஆசிய உடற்கட்டமைப்பு போட்டியில் வெண்கலப் பதக்கம் (65 கிலோ) வென்ற உடற்கட்டமைப்பாளர் கோப்ரல் பிரசன்னவும் இராணுவத்  தளபதியை  சந்தித்தார்.

இந்த சந்திப்பில், இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள்,   வீர வீராங்களைகளின் தேசத்திற்கான விலைமதிப்பற்ற பங்களிப்பைப் பாராட்டியதுடன்   அவர்களுக்கு நிதி வெகுமதிகள் மற்றும் பாராட்டு சின்னங்களையும் வழங்கி வைத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மரதனில் சொந்த உலக சாதனையை கிப்சோகே...

2022-09-26 15:07:13
news-image

கபடி போட்­டி­யா­ளர்­க­ளுக்கு கழி­வ­றையில் வைத்து உணவு...

2022-09-26 13:15:07
news-image

இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது சர்வதேச இருபது...

2022-09-26 11:27:15
news-image

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக விறுவிறுப்பாக நடைபெற்ற சர்வதேச...

2022-09-26 09:29:13
news-image

யார் பலசாலி ? இந்தியாவா ?...

2022-09-25 15:35:12
news-image

அவுஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை சமப்படுத்தியது இந்தியா

2022-09-24 09:36:18
news-image

தொடரை வெல்ல அவுஸ்திரேலியாவும் சமப்படுத்த இந்தியாவும்...

2022-09-23 16:38:43
news-image

பாபர் அஸாம் - ரிஸ்வான் அதிரடி...

2022-09-23 09:34:57
news-image

107ஆவது தேசிய டென்னிஸ் சம்பியன்ஷிப்பில் அஷேன்,...

2022-09-22 20:35:10
news-image

உதைபந்தாட்ட சம்மேளனத்தின் புதிய யாப்பு பெரும்பான்மை...

2022-09-22 15:17:50
news-image

ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்...

2022-09-21 22:58:49
news-image

2022 றக்பி விருது விழாவில் கண்டி...

2022-09-21 21:03:22