நியூ­ஸி­லாந்தை தாக்கிய பூமி­ய­திர்ச்­சி­க­ளுக்கு தன்­னி­ன­ச்சேர்க்­கை­யா­ளர்­களே காரணம் என அந்­நாட்டைச் சேர்ந்த சர்ச்­சைக்­கு­ரிய தேவா­லய தலைவர் ஒருவர் குற்­றஞ்­சாட்­டி­யுள்ளார்.

"உல­க­மா­னது மனித பாவத்தின் சுமை யின் கீழ் கொந்­த­ளித்துக் கொண்­டி­ருக்கி­ற­து. ஒரு சம­யத்தில் அது தாங்­க­மு­டி­யாது இயற்கை அனர்த்­தங்­க­ளாக அந்தப் பாவங்­களை தான­ாகவே வெளியே உமிழ்­கி­றது. ஏனெனில்  இயற்­கை­யா­னது ஒரு­போதும் எமது அநீதிகளுக்கு அடிமைப்பட்டிருக்கும் வகையில் சிரு ஷ்டிக்கப்படவில்லை" என அந்­நாட்டு டெஸ்­ரினி தேவா­லயத் தலை­வ­ரான ஆயர் பிறையன் தமாகி தெரி­வித்தார்.