(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)
சர்வதேச நாணய நிதியத்துடனான ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தையின் இணக்கப்பாட்டு அம்சங்களை பகிரங்கப்படுத்த முடியாது.
இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவு பெற்றதன் பின்னர் முழுமையான அறிக்கை பாராளுமன்றுக்கு சமர்ப்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற அமர்வு கூடிய போது சர்வதேச நாணய நிதியத்துடனான உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாடு தொடர்பில் எதிர்தரப்பினர் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அரசாங்க நிதி தொடர்பான குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா கூறுகையில்
கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கையின் பிரதான நிலை கடன் வழங்குநர்கள் நாளை ஒன்றிணைந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்கள்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் மட்ட இணக்கப்பாடு தொடர்பில் பாராளுமன்றுக்கு அறிக்கையிடுமாறு அரசாங்கத்திடம் பலமுறை வலியுறுத்தியுள்ளோம்.
ஊழியர் மட்ட இணக்கப்பாட்டில் உணர்வுபூர்வமான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதால் அவற்றை வெளிப்படுத்த முடியாது என்பதையும் ஏற்றுக்கொள்கிறோம்.
முழுமையான அறிக்கையை நாம் கோரவில்லை. இருப்பினும் கடன் வழங்குநர்களுடன் கடன் மறுசீரமைப்புக்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு முன்னர் ஒரு சில விடயங்களையாவது பாராளுமன்றுக்கு சமர்ப்பியுங்கள் என்பதையே கோருகிறோம் என்றார்.
இதற்கு பதிலளித்த நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க,
சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னெடுக்கும் விடயங்களை மறைக்க வேண்டிய அவசியம் கிடையாது. இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சர்வதேச மட்டத்தில் நிதி மற்றும் சட்ட துறைக்கான நிபணர்களின் ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
நிதி மற்றும் சட்ட ஆலோசனை குழுவின் ஆலோசனைகளுக்கமையே ஆரம்பகட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை இடம்பெறும் நிலையில் ஆரம்பக்கட்ட இணக்கப்பாட்டு அம்சங்களை பகிரங்கப்படுத்த முடியாது.
இறுதி கட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்ததை தொடர்ந்து அறிக்கை முழுமையாக பாராளுமன்றுக்கு சமர்ப்பிக்கப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM