(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)
விசதன்மையிலான திரிபோஷா விநியோகிக்கப்பட்டுள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு அடிப்படையற்றதாகும்.
போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். திரிபோஷா விவகாரம் தொடர்பில் அறிவியல் பூர்வமான அறிக்கையை சபைக்கு சமர்ப்பிப்பேன். மருந்து தட்டுப்பாடு உள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறோம், ஆனால் அது பாரதூரமானதல்ல, என சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
சபாநாயகர் தலைமையில் புதன்கிழமை (21) இடம்பெற்ற அமர்வின் போது விச தன்மையிலான திரிபோஷா கர்ப்பிணி தாய்மார்களுக்கும்,பிள்ளைகளுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை மீள பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொது சுகாதார சேவைகள் சங்கத்தின் தலைவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டின் உண்மை தன்மை என்ன என ஐக்கிய மக்கள் சக்தியின்
உறுப்பினர் ரோஹினி கவிரத்ன வாய்மொழி மூலமாக முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் மேலும்கூறுகையில்
வெளிநாட்டு கையிருப்பு பற்றாக்குறையால் நாட்டில் மருந்து தட்டுப்பாடு காணப்படுகிறது என்பதை ஒருபோதும் மறுக்கவில்லை.
இருப்பினும் உயிர்காக்கும் அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை.அதாவது மருந்து தட்டுப்பாடு உள்ளது ஆனால் அது பரிமான அளவில் பாரதூரமானதாக இல்லை.
ஒரு சில மாவட்டங்களில் மருந்து தட்டுப்பாடு உள்ளதாக வைத்தியசாலை தரப்பினர் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு திட்டமிட்ட வகையில் மருந்து தட்டுப்பாடு என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றன.
ஒரு பிள்ளை சோற்றுடன் மிளகாய் சேர்த்து உண்ணும் போது அதனை நாட்டின் அவல நிலை அல்லது உணவு பாதுகாப்பின் அச்சுறுத்தல் என குறிப்பிட முடியாது.
இலங்கையின் மந்த போசணை நிலைமை தொடர்பில் யுனிசெப் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் யுனிசெப் நிறுவனத்துடன் பேசசுவார்த்தையை மேற்கொண்டேன்.
2016ஆம் ஆண்டு மேற்கொண்ட மதிப்பீடு மற்றும் ஆய்வு அறிக்கையை அடிப்படையாக கொண்டே யுனிசெப் நிறுவனம் 2022ஆம் ஆண்டு அறிக்கை வெளியிட்டது. இவ்வறிக்கையில் இலங்கையின் நிலை தரப்படுத்தப்பட்டுள்ளமை குறித்து யுனிசெப் நிறுவனம் கவலை தெரிவித்தது.
விசதன்மையிலான திரிபோஷா விநியோகிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடும் செய்தி முற்றிலும் பொய்யானதாகும்.
திரிபோஷா உற்பத்தியின் போது அப்ளொடொக்ஷின் அடங்கிய சோளம் நீக்கப்படும்.பொது சுகாதார சேவைகள் சங்கத்தின் தலைவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கியுள்ளேன். திரிபோஷா தொடர்பில் அறிவியல் ரீதியான அறிக்கையை பாராளுமன்றுக்கு சமர்ப்பிப்பேன்.
சுகாதாரத்துறை தொடர்பில் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து நாட்டு மக்களை தவறாக வழிநடத்தும் தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.அரசியல் நோக்கங்களுக்காக சுகாதார துறையை பயன்படுத்த வேண்டாம் என்பதை பொறுப்புடன் வலியுறுத்துகிறேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM