மெக்சிக்கோவில் நிலநடுக்கம் : இருவர் உயிரிழப்பு ; 200 க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதம்

Published By: Digital Desk 3

21 Sep, 2022 | 11:35 AM
image

கடந்த காலத்தில் ஏற்பட்ட 2 நிலநடுக்கங்களின் நினைவுநாளில் மெக்சிக்கோவை பயங்கர நிலநடுக்கம் தாக்கியுள்ளது. இதில் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன் 200 க்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.

மெக்சிக்கோ சிட்டி அருகில் உள்ள மேற்கு மைக்கோகன் மாகாணத்தில் நேற்று முன்தினம் மதியம் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. 

அங்கு கோல்கோமன் நகரை மையமாக கொண்டு நிலநடுக்கம் தாக்கியது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7 புள்ளிகளாக பதிவானது. 

சில வினாடிகளுக்கு நீடித்த நிலநடுக்கத்தின் போது வீடுகள், கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின.

இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்தபடி கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். 

நிலநடுக்கத்தால் அங்கு ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. குறிப்பாக மைக்கோகன் மாகாணத்தில் ஆஸ்பத்திரிகள் உள்பட எண்ணற்ற பழமையான கட்டிடங்கள் இடிந்து விழுந்து சின்னபின்னமாகின.

அதே போல் அண்டை மாகாணமான கோலிமாவின் மன்சானிலோ நகரில் வணிக வளாகம் ஒன்று இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். 

இதனிடையே நிலநடுக்கத்தை தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் மக்கள் கடும் பீதியடைந்த நிலையில் சிறிது நேரத்தில் சுனாமி எச்சரிக்கை திரும்பப்பெறப்பட்டது. 

இதற்கு முன் 2 முறை நாட்டை அதிரவைத்த அதே செப்டம்பர் 19 ஆம் திகதி மீண்டும் ஒரு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது மெக்சிகோ மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2026க்கான உலக அழகு ராணி: தமிழர்களின்...

2026-09-07 20:55:14
news-image

மக்கள் தீர்ப்பை ஏற்காதவர்கள் ஏன் அரசியலில்...

2026-09-07 16:20:54
news-image

நேபாளத்தில் 1,340 பேரை பலிகொண்ட பேரழிவு...

2026-09-07 15:49:43
news-image

மெக்சிக்கோவில் மதச் சடங்கில் வெடிவிபத்து :...

2026-09-07 11:14:55
news-image

இந்தோனேசியாவில் தொடரும் அனக் கிரக்கடோவா எரிமலை...

2026-09-07 11:40:49
news-image

இந்தியாவில் ஒருகாலத்தில் "நாய்ப்பழம்" எனக் கைவிடப்பட்ட...

2026-09-07 09:53:36
news-image

அமெரிக்காவில் அமேசான் சரக்கு விமானம் விபத்து...

2026-09-07 11:47:43
news-image

உலக வரைபடத்தை மாற்ற ஐக்கிய நாடுகள்...

2026-09-06 18:41:17
news-image

டெல்லியில் 06 மாடி விடுதி கட்டிடம்...

2026-09-06 19:21:41
news-image

ஆற்றை தனியாளாக சுத்தம் செய்தவருக்கு சர்வதேச...

2026-09-06 16:44:38
news-image

நேபாளத்தில் மண்ணில் புதைந்த வீட்டிலிருந்து 10...

2026-09-06 14:57:08
news-image

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் உலக அழகு...

2026-09-06 14:17:08