உருளைக்கிழங்கு ஒம்லெட்

By Sindu

21 Sep, 2022 | 11:27 AM
image

தேவையான பொருட்கள் 

முட்டை - 5 

உருளைக்கிழங்கு - 2 

மிளகாய் - 5 

பெரிய வெங்காயம் - 1 

பட்டர் - சிறிதளவு 

உப்பு - தேவையான அளவு 

கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - சிறிதளவு 

செய்முறை 

கொத்தமல்லி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். உருளைக்கிழங்கை தோல் நீக்கி மெலிதாக சீவி, எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து கொள்ளவும். 

ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, அதனுடன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். அதனுடன் வெங்காயம், உருளைக்கிழங்கு, கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து கிளறிக்கொள்ளவும். 

நான்ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் பட்டர் தடவி உருளைக்கிழங்கு, முட்டை கலவையை ஊற்றி ஒம்லெட் போல வேகவிடவும். 

நன்கு வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறலாம். சூப்பரான உருளைக்கிழங்கு ஒம்லெட் ரெடி.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right