அந்­த­ரங்க புகைப்­ப­டங்­களை சமூ­க­வ­லைத்­த­ளத்தில் பதி­வேற்­றிய காத­ல­னான மருத்­து­வர் கொலை : யுவதி கைது

By Vishnu

21 Sep, 2022 | 11:12 AM
image

தனது அந்­த­ரங்க புகைப்­ப­டங்­களை சமூ­க­வ­லைத்­த­ளத்தில் பதி­வேற்­றிய தனது காத­ல­னான மருத்­து­வரை யுவதி ஒருவர் கொலை செய்த சம்­பவம் இந்­தி­யாவின் பெங்­க­ளூரு நகரில் இடம்­பெற்­றுள்­ளது.

கொல்­லப்­பட்ட நபர் 27 வய­தான இளைஞர் என அடை­யாளம் காணப்­பட்­டுள்ளார். இவர் யுக்­ரைனில் மருத்­துவ பட்டம் பெற்ற பின்னர் இந்­தி­யா­வுக்குத் திரும்பு மருத்­து­வ­ராக பணி­யாற்றி வந்தார். 

இந்த மருத்­து­வரை காத­லித்த 27 வய­தான யுவதி ஒருவர், அவ­ருடன் வாடகை வீடு ஒன்றில் சுமார் ஒரு வரு­ட­கா­ல­மாக இணைந்து வாழ்ந்து வந்­துள்ளார்.

இரு­வரின் குடும்­பத்­தி­னரும் இதை அறிந்­தி­ருந்த நிலையில், அடுத்த வருட முற்­ப­கு­தியில் இவர்கள் இரு­வ­ருக்கும் திரு­மணம் செய்ய திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­தது.

அண்­மையில் தனது அந்­த­ரங்கப் படங்கள் பேஸ்­புக்கில் வெளி­யி­டப்­பட்­டி­ருப்­பதை அந்த யுவதி கண்டார். இப்­ப­டங்­களை தனது காத­லனே போலி பேஸ்புக் கணக்கு மூலம் வெளி­யி­டப்­பட்­டி­ருப்­பதை யுவதி அறிந்தார் என பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

அதன்பின், இது தொடர்­பாக தனது நண்­பர்கள் இரு­வ­ரிடம் இது குறித்து மேற்­படி யுவதி கூறி­யுள்ளார். 

அவ்­வீட்­டுக்கு வந்த யுவ­தியின் நண்­பர்கள், மருத்­து­வ­ருடன் வாக்­கு­வா­தத்தில் ஈடு­பட்­டனர்.  இதை­ய­டுத்து நடந்த தாக்­கு­தல்­களில் மேற்­படி மருத்­துவர் காய­ம­டைந்து உய­ரி­ழந்­துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தையடுத்து மேற்படி யுவதியையும் அவரின் நண்பர்கள் இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சீனாவில் தயாரிக்கப்பட்ட முதல் பயணிகள் விமானம்...

2022-12-09 16:53:21
news-image

பாதுகாப்பு, மீட்பு பணியில் 16,000 போலீசார்:...

2022-12-09 16:48:41
news-image

பிரிட்டன், இத்தாலி, ஜப்பான் இணைந்து நவீன...

2022-12-09 15:40:44
news-image

ஈரானில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் பெண்களின் முகங்களையும்...

2022-12-09 15:34:50
news-image

புர்கா அணிந்து நடனமாடிய 4 ஆண்...

2022-12-09 13:22:54
news-image

சீனாவில் மாணவர்கள் போராட்டம்

2022-12-09 13:27:25
news-image

ரஷ்ய வணிக வளாகத்தில் கால்பந்து மைதானம்...

2022-12-09 12:30:43
news-image

'அவசியமான காரணங்களுக்காக மட்டுமே பயணம் மேற்கொள்ளுங்கள்'...

2022-12-09 13:19:06
news-image

இலங்கை இனப்படுகொலை: இந்தியா வாக்களிக்காததன் காரணம்...

2022-12-09 12:09:58
news-image

ஐரோப்பிய எல்லைகளில் குடியேற்றவாசிகள் முன்னர் ஒருபோதும்...

2022-12-09 11:56:20
news-image

ஒரு பாலினத் திருமணங்களைப் பாதுகாக்கும் சட்டமூலம்...

2022-12-09 11:49:09
news-image

இந்தியாவில் திருமண நிகழ்வில் எரிவாயு சிலிண்டர்கள்...

2022-12-09 11:17:28